உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - கள்ளுண்ணாமை

928. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்.

161

கள்ளை மறைவாக

(இ-ரை.) களித்து அறியேன் என்பது கைவிடுக உண்டுவருபவன், அதை யுண்ணாத வேளையில், “நான் கள்ளுண்டறியேன்" என்று தன்னை ஒழுக்கமுள்ளவனாகக் காட்டிக் கொள்வதை விட்டுவிடுக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - பிறரறியின் இழிவென்று முன்பு தன் மனத்தில் மறைத்து வைத்திருந்த குற்றமும், மறுமுறை யுண்டபொழுதே முன்னினும் அதிகமாக வெளிப் பட்டுத் தோன்றும்.

களித்தல் கள்ளுண்டல் அல்லது கள்ளுண்டு வெறித்தல். வெறிக்கா விடினும் வா-நாற்றமே கள்ளுண்டதைக் காட்டிவிடுதலால், 'ஒளித்ததூஉ மாங்கே மிகும்' என்றார். 'ஒளித்ததூஉம்' இன்னிசை யளபெடை. ஏகாரம் பிரி நிலை. இவ் விருகுறளாலும் கள்ளுண்டல் மறைக்கப்படாமை கூறப்பட்டது.

929.

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

-

(இ-ரை.) களித்தானைக் காரணம் காட்டுதல் கள்ளுண்டு வெறித்த வனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇய அற்று - நீர்க்குள் முழுகினவனை விளக்கொளி யால் தேடிப்பார்த்தலை யொக்கும்.

விளக்கொளி நீருட் செல்லாதது போன்று ஏதுரை கட்குடியன் மனத்துட் செல்லா தென்பதாம். களித்தானைக் காட்டுதல் என்பது களித்தானுக்குக் காட்டுதல் என்று பொருள்கொள்ளின் வேற்றுமை மயக்கமும், களித் தானைக் காணச் செ-தல் என்று பொருள் கொள்ளின் வேற்றுமை யியல்பும் ஆம். இங்ஙனமே "அவளைக்காட் டென்றானோ" என்னுங் கலித்தொகைத் தொடருங் (72) கொள்ளப்படும் கீழ்நீர் இலக்கணப்போலி 'துரீஇ' இன்னிசை யளபெடை. இக் குறளால் அடிப்பட்ட கட்குடியனைத் திருத்த முடியாமை கூறப்பட்டது.

930.

தான்

66

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

(இ-ரை.) கள் உண்ணாப் போழ்தில் கள்ளுண்பா னொருவன் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளையில்; களித்தானைக்