உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

திருக்குறள்

தமிழ் மரபுரை





இது அறிவில்லாத சிறுவரும் அறிவுதிரிந்த பித்தரும் செ-யுஞ் செயல்போன் றிருத்தலால், 'கையறியாமை யுடைத்தே' என்றார். இதற்குப் பழவினையைக் கரணியமாகக் காட்டுவர் பரிமேலழகர். ஏகாரம் தேற்றம்.

926.

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

உறங்குபவர் உயி

(இ-ரை.) துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் ருடையரேனும் அறிவும் மனவுணர்வும் அந் நிலையிலின்மையால் இறந்த வரை யொப்பர்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அதுபோல், கள்ளுண்பவர் இறவாதிருப்பினும் அறிவையும் உடல்நலத்தையும் என்று மிழத்தலால் நாள்தோறும் நஞ்சுண்பவரை யொப்பர்.

"இதனை நிரனிறையாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண் பாரு மொப்பர்; கைவிடப்படுதலாற் செத்தாருங் கள்ளுண்பாரு மொப்ப ரென்றுரைப்பாரு முளர். அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க யாது மியை பில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாக லானும், சொற்கிடக்கை நிரனிறைக் கேலாமையானும், அஃதுரையன்மை யறிக' என்று ஒருசாரா ருரையைப் பரிமேலழகர் மறுத்திருப்பது முற்றும் சரியே. இக் குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை அணி, 'துஞ்சினார்', 'செத்தார்' என்பன இங்குச் சிறப்புப்பொருள் குறித்தன வல்ல.

927.

உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சா- பவர்.

(இ-ரை.) கள் ஒற்றிக் கண்சா-பவர் கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள் ஊர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உ-த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர்.

கள்வெறியினால் உணர்விழந்தவர், பொருள் விளங்காத தொடர்களை மட்டுமன்றி, நனவுக் காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தனவும் தமக்கு மாறானவும் தம்மைத் தாழ்த்துவனவுமான செ-திகளையும் வெளிவிடுவராதலின், 'உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவர்' என்றார். “கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்”, “கள்ளைக் கொடுத்துக் கருமத்தை (காரியத்தை) அறி" என்பன பழமொழிகள். 'உள்ளூர்' இலக்கணப்போலி. ‘ஊர்', 'கண்' ஆகுபெயர்கள். 'உண்டு' என்பது அவா-நிலையான் வந்தது.