உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - கள்ளுண்ணாமை

159

வேண்டுவதில்லை யென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. 'மற்று' பின்மைப் பொருளது. 'ஆல்' அசைநிலை.

924.

நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

(இ-ரை.) கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு - கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செ-தவர்க்கு; நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும்-நாணம் என்று சொல்லப்படும் பெண்தெ-வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.

பெற்ற தாக்கும் வெறுப்பை விளைத்தலின் பேணா' 'பேணா' என்றும், ஒழுக்கக்கேட்டை மட்டுமன்றி உயிர்க்கேட்டையும் உண்டாக்குதலின் 'பெருங்குற்றம்' என்றும், கள்வெறியர் மானத்தை அறவே இழந்துவிடுதலின் 'நாண்....புறங்கொடுக்கும்' என்றும் கூறினார். 'நல்லாள்' என்பது அழகுபற்றிப் பெண்ணிற் கொருபெயர். 'நல்லபிள்ளை' என்னும் உலக வழக்கையும். "மைப்படு மழைக்க ணல்லார்” (சீவக. 2881) என்னும் செ-யுள் வழக்கையும் நோக்குக. நாண் மென்மைக் குணமாதலின் பெண்ணாக வுருவகித்தார். “பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி" என்பது பரிமேலழகர் நச்சுக்கூற்று. 'கள்' ஆகுபொருளது. இம் மூன்று குறளாலும் கள்ளுண்டல் ஒளியிழத்தற்குக் கரணியமென்று கூறப்பட்டது.

925.

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெ-யறி யாமை கொளல்.

-

(இ-ரை.) பொருள் கொடுத்து மெ - அறியாமை கொளல் ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக் கள்ளால் வரும் மெம்மறதியை வாங்குதல்; கை அறியாமை உடைத்தே செ-யும் முறைமையறியாமையைக் கரணிய மாக வுடையதே.

-

செ-கை; கருவியாகுபெயர். கையறுதல் செயலறுதல். கையறி யாமை செ-கை அல்லது செ-யும் முறையை யறியாமை. "கையறியாப் பேதை" என்று ஆசிரியர் வேறிடத்துங் (குறள். 836) கூறுதல் காண்க. உலகத்தார் எங்கும் என்றும் நல்ல பொருளையே விலை கொடுத்து வாங்குவது இயற்கை. பொதுவாக மெ-ம்மறதி மயக்கம் என்னும் நோயால் உண்டாவது. நோ- நீக்கும் மருந்தையன்றி நோயை விலைக்கு வாங்கார். கள்ளை விலை கொடுத்து வாங்கி அதனால் மயக்கத்தைப் பெறுவது, நோயை விலைக்கு வாங்குவது போன்றதே.