394
மூடு:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
சால். குட்டி என்னும்
(
மூடு
என்பது பழமையான
பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச் சொல் அப் பொருளில் திருச்சி, கருவூர் வட்டார வழக்குகளில் உள்ளது. வெள்ளாட்டுப் பெண்குட்டியின் பெயர் அது. மறி என்பது பாற் பொதுப் பெயர். ஆண்மறி, பெண் மறி எனப்படும். மறி=குட்டி; “மான் மறி.”
மூணாரம்:
இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை ஒன்று; அதன்மேற்காப்பாக ஒட்டியாணம் என்றும் டைவார் என்றும் அணிவன மற்றொன்று மூன்று ஆரம் (சுற்றுக்கட்டு, பாதுகாப்பு) இருப்பதால் மூணாரம் எனப்பட்டது. பொது மக்கள் பார்வை, புலமக்கள் பார்வையை வெல்லும் திறச் சான்றுகளுள் ஒன்று இஃதாம்.
மெதை:
மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோயில் வட்டாரத் தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர். மிதப்பது மிதை என்பது இயல்பான ஆட்சி.
மெய்யப்பெட்டி:
அடக்கம் செய்வதற்குச் 'சவப்பெட்டி' செய்கின்றனர். சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வது பெரிதும் கிறித்தவ வழக்கு. இரணியல் வட்டாரத்தார் சவப் பெட்டியை மெய்யப் பெட்டி என்பது அருமை மிக்க வழக்காகும். மெய்=உடல். உடலை வைக்கும் பெட்டி மெய்யப் பெட்டி. ‘சவம்' என்பதனினும் 'மெய்' செவிக்கும் வாய்க்கும் மணப்பதாக அமைகின்றதே.
மெனக்கி நாள்:
வினைக்கேடு என்பது மெனக் கேடு என வழங்கும். வினை மெனை என ஒலிவகை வழுவாகின்றது. வேலை இன்றி இருப்பது வினைக்கேடு. திருச்செந்தூர் வட்டாரத்தார் விடுமுறை நாளை 'மெனக்கிநாள் என்கின்றனர். மெனக்கெட்ட (வினைகெட்ட) நாள் மெனக்கி நாளாயிற்று.