உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

திருக்குறள்

தமிழ் மரபுரை





என்பன. இவையெல்லாங் கூடியவழியல்லது நோ- தீராமையின், ‘அப்பானாற் கூற்றே மருந்து என்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார். 'உற்றவன்', ‘தீர்ப் பான்' என்னும் இரண்டிற்கு முரிய செயப்படுபொருள் முந்திய குறளினின்று வந்தது. உழைச்செல்வான் மருந்து கொடுப்பவனாக மட்டுமன்றிச் செ-ப வனாகவு மிருந்தால், மேலைமுறை மருத்துவமனையிலுள்ள கலக்குநரினும் (compounder) மருத்துவ அறிவாற்றலிற் சிறந்தவனாவன்.

'அப்பானாற் கூற்று' என்பதற்கு "நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது" என்று உரையும், "நான்கென்னு மெண் வருகின்றமையின், அது நோக்கி ‘அப்பா’லென் றொழிந்தார் என்று சிறப்பும் கூறினார் பரிமேலழகர். அது பொருந்தாமை,

"அவற்றுள் அஇஉ

66

எஒ என்னும் அப்பா லைந்தும்

ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப”

ஆ ஈ

ஊஏஐ

ஓ ஒள என்னும் அப்பா லேழும்

(3)

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப”

(4)

என்னும் தொல்காப்பிய நூற்பா யாப்பை நோக்கி யுணர்க. இனி, இவ் வதி காரம் முழுதும் ஆயுள்வேதம் என்னும் ஆரிய மருத்துவ நூன்முறையைத் தழுவியதாகப் பரிமேலழகர் ஆங்காங்கு உரைத்திருப்பது, உண்மைக்கு நேர்மாறாம்; ஆரியர் வருமுன் வடநாவலத்திலும் பனிமலைவரை தமிழரும் திரவிடருமே மிகுதியாயப் பரவியிருந்தனரென்றும், வடநாட்டுச் சித்த மருத்துவமே பிற்காலத்தில் ஆயுள்வேதமெனப் பெயர் மாற்றப்பட்ட தென் றும், இது பழந்தமிழிசையே இன்று பாகுபாடும் குறியீடுகளும் மாற்றப்பட்டுக் கருநாடக சங்கீதம் என வழங்குவது போன்ற தென்றும், அறிந்துகொள்க.

உறுப்பியலில் நட்புப் பகுதி முற்றிற்று.

இனி, அரசியலுறுப்புகள் ஏழுள் இறுதியான குடியைப்பற்றிப் பதின் மூன் றதிகாரங்களாற் கூறத் தொடங்கி, முதற்கண் குடிமை கூறுகின்றார்.