உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (குடி) - நன்றியில் செல்வம்

1004.

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன்.

207

(இ-ரை.) ஒருவரால் நச்சப்படாதவன் ஒரு பொருளும் ஈந்தறியா மையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங் கொல் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ?

மக்கள், பொருள், புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்த தாதலின், 'என்னெண்ணுங் கொல்லோ' என்றார். ஓகாரம் அசைநிலை. 'கொல்' ஐயப்பொரு ளிடைச்சொல். 'படாஅ' இசைநிறை யளபெடை. இழிவுசிறப் பும்மை தொக்கது.

1005. கொடுப்பதூஉங் து-ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில்.

(இ-ரை.) கொடுப்பதும் து-ப்பதும் இல்லார்க்கு - பிறருக்கீவதும் தாம் நுகர்வதுமாகிய இரண்டு மில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்ப தாகாது.

செல்வத்தின் இரு பயனுமின்மையால் 'இல்' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. 'கோடி அளவையாகு பெயர். 'கொடுப்ப தூஉம்', ‘து-ப்பதூஉம்` இன்னிசை யளபெடைகள். உம்மை உயர்வுசிறப்பு.

66

"எனதென தென்றிருக்கு மேழை பொருளை

எனதென தென்றிருப்பன் யானும் – தனதாயின்

தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான்

யானு மதனை யது’

என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

(நாலடி. 276)

1006. ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்

றீத லியல்பிலா தான்.

(இ-ரை.) தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான் - தகுதியுடைய வர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனா; தான் துவ்வான் – அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம்