206
திருக்குறள்
தமிழ் மரபுரை
ஈவதாற் குறைந்துவிடுமென்றும் கருதுதலும்; "செல்வம் சகடக்கால் போல வரும்" என்றும் (நாலடி. 2), "செல்வத்துப் பயனே யீதல்" (புறம். 189) என்றும், “இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்” என்றும், "இம்மைச் செ-தது மறுமைக் காம்” (புறம். 134) என்றும் அறியாமையும், மாணாப் பிறப்பாவன:
"சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவும் மருளும்
(புறம்.28)
என்னும் எண்பேரெச்சமும் அலியுமாம். இனி, வீணாகப் புதையலைக் காக்கும் பேயும் பூதமும் எனினுமாம்.
1003. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்ற நிலக்குப் பொறை.
-ரை) ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம்
-
பிறரொடு
போட்டியிட்டுப் பெரும்பொரு ளீட்டுவதையே பெருவிருப்பக் குறிக்கோ ளாகக் கொண்டு, அதன் பயனாகிய புகழை விரும்பாத ஆண்மக்களின் பிறப்பு; நிலக்குப் பொறை - இந் நிலவுலகிற்குச் சுமையாவதன்றி ஒரு பயனும் படுவதன்று.
"உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்",
(குறள்.232)
"ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு",
(குறள். 231)
“வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்”,
(குறள்.238)
66
"வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்”
(குறள்.239)
என்று முன்னரே கூறியுள்ளமையால், 'நிலக்குப் பொறை' என்று அதை இங்கு நினைவுறுத்தினார். வெளியூரும் வெளிநாடுஞ் சென்று பெரும்பொருளீட்டுவது வணிகருள் ஆண்மக்கள் செயலாதலின் ‘ஆடவர்' என்றார். “வினையே ஆடவர்க் குயிரே" (குறுந். 135) "முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை" (தொல். 980). 'தோற்றம்’ என்றது தோன்றிய வுடம்பை. 'நிலக்கு' அத்துச் சாரியை தொக்கது.