உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (குடி) - நன்றியில் செல்வம்

205

பயன்படாமை தோன்றத் 'திரிந்தற்று' என்றும் கூறினார். இதனால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவா- செ-யப்பட்டது. இந் நான்கு குறளாலும் பண்பிலாரின் இழிவு கூறப்பட்டது.

அதி. 101 -நன்றியில் செல்வம்

அதாவது, ஈட்டியவனுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வத்தின் தன்மை. உடையவனது குற்றம் உடைமையின்மே லேற்றப்பட்டது. 'பண் பிலான் பெற்ற பெருஞ் செல்வம்' என்று மேலதிகார ஈற்றில் இதற்குத் தோற்று வா செ-யப்பட்டதே இதன் அதிகார முறைமையைக் காட்டும்.

1001. வைத்தான்வா- சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்.

(இ-ரை.) வா-சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனையிட மெல்லாம் நிறைதற்கேதுவான பெருஞ் செல்வத்தை ஈட்டி வைத்தும், கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன்; செத்தான் உடம்போ டுளனாயினும் செத்தவனாவன்; செயக்கிடந்தது இல் அதைக்கொண்டு அவன் செ-யக் கிடந்ததொரு செயலுமில்லை.

செல்வமிருந்தும் அதை நுகராமையால், செத்தவனுக்கு ஒப்பாவன் என்பது கருத்து. 'வைத்தான்' முற்றெச்சம்.

1002.

"உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செ-யான்

துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்."

பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு.

(நாலடி.9)

(இ-ரை.) பொருளான் எல்லாம் ஆம் என்று - செல்வ மொன்றுமட்டு மிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகுமென்று கருதி; ஈயாது இவறும் மருளான் - அதைப் பிறர்க்கீயாது இறுகப்பற்றும் மயக்கத்தினால்; மாணாப் பிறப்பு ஆம்-இழிவான பிறப்பு உண்டாம்.

இம்மைக்கும் மறுமைக்கு முரிய வினையின்பங்கள் யாவும் அடங்க 'எல்லாம்' என்றார். மருளாவது செல்வம் நிலையானதென்றும், பிறர்க்கு