4
3
இளங்குமரனார் தமிழ் வளம் – 3
கொடுத்துள்ள சொற்பட்டி மிகவும் அரிய இன்றியமையாத தொகுப்பாகும்” என்றும், “தங்கள் முயற்சி பெரும்பயன் தரும்” என்றும், “காலத்தால் வரவேண்டிய கருவிநூல்" என்றும் பல்காலும் ஊக்கி உதவியமை, பன்னரிய பயன் விளைவாயிற்று! த்தொகுப்பு நூல் தோன்றி வளர்ந்த வரலாறு இது!
இந்நூற்கண் விளக்கப் பெற்றுள்ள சொற்கள் 1159ஆம். இவற்றுள் தமிழ் என்னும் ஒரு சொல் பதின்மூன்று விளக்கங் களையும், அன்பு என்னும் ஒரு சொல் எட்டு விளக்கங்களையும், அந்தணர், அறம், நிறை என்னும் மூன்று சொற்களும் அவ்வாறு விளக்கங்களையும், தூக்கு, மறை என்னும் இரண்டு சொற்களும் ஐந்தைந்து விளக்கங்களையும் பெற்றுள்ளன. மேலும், 11 சொற்கள் நான்கு விளக்கங்களையும், 37 சொற்கள் மூன்று விளக்கங்களையும், 118 சொற்கள் இரண்டு விளக்கங்களையும் தனித்தனி பெற்றுள்ளன. எஞ்சிய 986 சொற்களும் ஒவ்வொரு விளக்கம் பெற்றனவாம். ஆகச் சொல் அளவால் 1159 சொற்களும், விளக்க அளவால் 1416 சொற்களும் இந்நூற்கண் அடங்கியுள்ளன. ‘ஆ” என்பது பெற்றத்தினை உணர்த்தும்வழிப் பெயர்ச் சொல் எனவும், இரக்கக் குறிப்பினை உணர்த்தும் வழி இடைச் சொல் எனவும், ஏவற் பொருண்மையை உணர்த்தும்வழி வினைச் சொல் எனவும், ஆதற் புடைபெயர்ச்சியை உணர்த்தும்வழி உரிச்சொல் எனவும் கோடல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையின் எழுத்தொப்புமை பற்றி உபசாரத்தால் பலபொருள் ஒரு சொல் எனப்படினும் உண்மையான் வேறுவேறு சொல்லேயாம்” என்று மாதவச் சிவஞானமுனிவர் கூறியாங்கு வேறுவேறு சொல்லாகக் காள்ளாது ஒரு சொல்லாகக் காண்டு
66
எண்ணியது இத் தொகைச் சொல்லாம்! (‘ஆ’ என்பது காண்க.)
இனி, “மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும் பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ‘ஓங்கல்' ‘பிறங்கல்’ பொருப்பு' 'வெற்பு' என்றும்; ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்' என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை ‘அடுக்கல்’ என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் 'சிலம்பு' என்றும்; மூங்கிற் காடுகள் உள்ள மலையை ‘வரை’ என்றும்; காடுகள் அடர்ந்த மலையை 'இறும்பு' என்றும்; சிறிய மலையைக் ‘குன்று’ குவடு' ‘குறும்பொறை' என்றும்; மண்மிகுந்த மலையைப்
ப
ய