உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

தமிழ் வரலாறு

பல்கலைக்கழகவியல்

ஆகிய

பொதுவியல், முத்துறை யிலும், தமிழுக்கும் உண்மைக்கும் மாறான சொற்பொழிவுகளும் வெளியீடுகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பான பதவியிலுள்ள பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர், தமிழைக் காட்டிக்கொடுப்பதும் அதற்கு உடந்தையாயிருப்பதும் அதைப்பற்றிக் கவலாதிருப்பதுமாக முந்நிலைப் பட்டுள்ளனர். அவருள், காட்டிக்கொடுப்பவர் ஆரிய அடிப்படையில் தமிழைக் கற்றவர்; ஏனையர் ஆரியத்தை அடியோடறியாதவர். இவ்விரு சாரார்க்கும், நெல்லை வட்டார நாட்டுப்புறத் தமிழை அறியாமை, சொந்தமாய், மொழி யாராய்ச்சி செய்யாமை, தென்சொல்வளந் தெரியாமை, தமிழ்ப்பற்றின்மை, தன்னல முதன்மை, நெஞ்சுர மின்மை ஆகியவை பொதுவாம்.

இந்நிலையில், தமிழின் உண்மையான வரலாறு வெளி வருவது இன்றியமையாத தாகின்றது. தமிழ்வரலாறு என்னும் பெயரில் இதுவரை வெளிவந்தவை யெல்லாம், பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாறும் மொழிபற்றிய பொதுவான செய்தி களை எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும் மொரிநூலையும் தழுவி, முதன்முதலாக வெளிவரும் தமிழ் மொழி வரலாறு இதுவே. நான் சேலங்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியனா யிருந்தபோதே, தவத்திரு மறைமலையடிகள் இதை வெளியிடுமாறு என்னைப் பணித்தார்கள். ஆயினும், அது இதுவரை நிறைவேற வாய்ப்பில்லாது போயிற்று.

ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் அமெரிக்கருமான மேலையர் இற்றை அறிவியல்களில் தலைசிறந்தவரும் வழிகாட்டி களுமாயிருப்பினும், தமிழர் நண்ணிலக் கடற்படையினின்று தென்னாடு வந்தவ ரென்றும், இந்திய நாகரிகம் வேத ஆரியர் கண்டதென்றும், இரு தவறான கருத்துக்கள் அவருள்ளத்தில் ஆழ வேரூன்றி யிருப்பதனால், பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், பிற்பட்ட சமற்கிருதத்தை முற்பட்ட தமிழுக் கடிப்படையாக வைத் தாய்ந்து, ஆரிய வெம்மணற் பாலைப்பரப்பில் அலைந்து வந்து வழிதெரியாது மயங்கி, எல்லாமொழிகளும் அறிகுறித் தொகுதிகளே

என்றும், ஆயிரமாண்டிற் கொருமுறை மொழி

களெல்லாம் அடியோடு மாறிவிடுகின்றன என்றும், அதனால் மொழித் தோற்றத்தைக் காணமுடியாதென்றும், முடிபு கொண்டு, மேற்கொண்டு உண்மைகாண முடியாவாறு, தம் கண்ணைத் தாமே இறுகக் கட்டிக்கொண்டவர். மொழிநூல்