உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

97

பட்டினம் பிள்ளையார் = பட்டினத்துப்பிள்ளையார்

நகரம்+ஆன் நகரத்தான்

இவை தோன்றலும் கெடுதலும்.

வேம்பு+காய் = வேப்பங்காய்

பனை+தோப்பு பனந்தோப்பு

இவை தோன்றலும் திரிதலும் கெடுதலும்.

மரூஉப் புணர்ச்சி

சில சொற்கள் ஒலிநெறிப்படி ஒழுங்காய்ப் புணராது மருவிப் புணரும். அப் புணர்ச்சி மரூஉப் புணர்ச்சியாம். மருவுதல், நெறி திறம்புதல்.

எ-டு: ஆதன்+தா

அகம்+கை = அங்கை.

(ஆந்தா)-ஆந்தை

நாழி+உரி = நாழுரி-நாடுரி

மக+கள் = மக்கள்

உள்ளங்கை (உள்+அங்கை) என்பது அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது சாரியையன்று.

எந்தை, தந்தை என்பன மரூஉப் புணர்ச்சியல்ல. இவை எம்+தா, தம்+தா எனப் பிரியும். தா என்பது தந்தையைக் குறிக்கும் பெயர்ச்

சொல்.

தா+தா = தாதா-தாதை (தந்தையின் தந்தை)-இயல்புப்புணர்ச்சி தா+தா = தாத்தா (தந்தையின் தந்தை)-திரிபுப்புணர்ச்சி

தாதை என்பதிற் போன்றே, எந்தை, தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா என்பதன் திரிபாகும்.

ஒ.நோ:

எம்பி(ன்) எங்கை எவ்வை எம்முன் எந்தை நுங்கை நுவ்வை நும்முன் நுந்தை

நும்பி(ன்) தம்பி(ன்)

தங்கை தவ்வை தம்முன் தந்தை

எம்பின் = எமக்குப் பின் பிறந்தான். கை = தங்கை (பிங்.). எங்கை = எமக்குச் சிறியவள். எம் + அவ்வை = எவ்வை. இதில் அவ்வை என்னும் அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக் குறித்தது. இச் சொல் சில பழஞ்செய்யுள்களில் தங்கையைக் குறிப்பது, காதல் பற்றிய மரபு வழுவமைதியென அறிக. என் தந்தை, என் தம்பி, என் தங்கை என்பனவெல்லாம் வழக்குப் பற்றிய வழுவமைதியே.