உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் ஆணிவேர்

மெல்லியவேர், சல்லி வேர், பக்க வேர்

ஆழ்ந்து செல்லும் வலிய வேர்.

11

அக்குதல்-சுருங்குதல்; மெலிதாதல். ஒரு மரத்தின் வேர் களுள் பக்கத்துச் செல்லும் வேர் பலவாய் மெலியவாய் இருக்கும். ஆணிவேர் நேர் கீழ் இறங்குவதாய் ஒன்றாய் வலியதாய் இருக்கும். 'அக்கு வேராக ஆணிவேராக ஆய்தல்' என்பது வழக்கு. ‘அக்குவேறு ஆணிவேறு' காண்க.

அக்குவேறு ஆணிவேறு

அக்கு ஆணி

முள்

காலடியில் தோன்றிய கட்டி.

முள் தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டிபட்டுக் கல்போல் ஆகிக் காலையூன்ற முடியா வலிக்கு ஆளாக்கும், பின்னர் அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதல் உண்டு. அதனை ஆணி பிடுங்குதல் என்பர். 'காலாணி எடுக்கப்படும்' என விளம்பரம் செய்து கொண்டு வீதியோரங்களில் இருப்பாரை நகரப்பகுதிகளில் காணலாம். அக்கமணி-முள் மணி. ‘ அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்குதல்’ என்பது வழக்கு.

அடக்கம் ஒடுக்கம்

அடக்கம்

ஒடுக்கம்

66

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறி களையும் மனத்தையும் அடக்குதல்.

பணிவுடன் ஒடுங்கி நிற்றல்.

66

"ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல்” “அடக்கம் அமரருள் உய்க்கும்" "புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்”-என்பவை அடக்கம்.

6

"சென்னி மண்ணுற வணங்கி வாசச், சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையிற் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்” இது கைகேயி முன்னர் இராமன் நின்ற பணிவுநிலை. இஃது ஒடுக்கம். சான்றோர் ஒடுங்கிய இடம் ஒடுக்கம் எனப் பெறுதலையும் கருதுக.