அக்கம் பக்கம்
அக்கம்
பக்கம்
இணைச் சொல் அகரமுறை
தன் வீடும் தானிருக்கும் இடமும்.
தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தான் இருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும்.
இ
ஒரு குடிவழியர் அல்லது தாயாதியர் இருக்கும் வீடு வளைவு, வளசல் எனப் பெறும். அவ்வீடுகள் ஒரு காலத்தில் ஓருடைமையாய் இருந்து பின்னர்ப் பலபாகமாய் அமைதல் வழக்கு. அவற்றுள் தன் வீடும் இடமும் அக்கமும், அதற்கு அருகிலுள்ளது பக்கமும் ஆயது. அக்கம்-அகம்; பக்கம்-பகம்;(பிரிவு)
66
“ பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே" என்பது பழமொழி.
அக்குத்தொக்கு
அக்கு
தொக்கு
தவசம்
பணம்
அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத்தேடு என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாதல் அறிக.
தொக்கு-தொகுக்கப் பெற்றது; தொகை பயிர்களில் தவசப் பயிர், பணப் பயிர் என இரு வகை இருத்தல் அறிக. ‘ அக்குத் தொக்கு இல்லை' என்பது மரபு மொழி. தவசமும், பணமும் இல்லை யென்றும், தவசமும், பணமும் தந்துதவுவார் இலர் என்றும் இரண்டையும் குறிக்கும். இனி உற்றார் உறவு இல்லை என்பதையும் குறித்தல் உண்டு. அக்கு-உற்றார்; தொக்கு-உறவு.