உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

9

மிகுக்காமலும், இலக்கியச் சான்றுகளைப் பெருக்காமலும் வேண்டுமளவு விளக்கமே செய்யப்பட்டுள.

66

இத்தகு சொல்லாய்வு "பருகுவன் அன்ன ஆர்வத்” தர்க்கும், கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” அன்னர்க்கும் விருந்தாம்.

இவ் விணைச்சொற்களுள் பெரும்பாலனவும் பொது மக்கள் வழக்கில் இருந்து பொறுக்கப்பட்டவையே! எனினும், ஆய்வுக்களப் பொருளாக இஃது உருக்கொண்டுள்ளமையால், புலமக்களுக்கே உரியதாய் அமைந்ததாம். பொதுமக்களும் ஓராற்றாற் சுவைக்கக் கூடுமெனினும் புலமக்கள் போல் நுனித் துணரும் பயிற்சியும், வாய்ப்பும், வாழ்வு நிலையும் அவர்க்கு இன்மையால், அவர்கள் தம் உடைமையாய் உரையாய் விளங்கு பவற்றையும் உணரும் வாய்ப்புத் தலைக்கூடினார் அல்லராம். ஆனால், அவர்கள் அறியத் தலைப்பட்டால் அவ்வளவில் உவகை கொள்ளவும் வியப்பில் தளிர்க்கவும் கூடுமெனலாம்.

இங்குக் காட்டப் பெற்ற இணைச்சொற்கள் மேலோட்டத் தொகுப்பே. இன்னும் ஆழ்ந்தும் வழக்கில் தோய்ந்தும் இடந்தோறும் பயின்றும் இணைக்கத் தக்க இணைச் சொற்கள் மிகப் பலவாகலாம். அவற்றை இணைக்கும் முயற்சியில் ஆர்வலர் ஈடுபடுதல் வேண்டும்.

இவ்வினைச் சொற்களுக்குக் காட்டிய நுண்பொருள் வேறுபாட்டினும் நுணுகிச் சென்று பொருள் காண வேண்டியவை உண்டு; பொருள் விளக்கம் செய்ய வேண்டியவை உண்டு. ஏன்? பொருளும் விளக்கமும் பொருந்தாதனவாய் முரண் பட்டனவாய் இருத்தலும் கூடும்! ஆயின், இது முதன் முயற்சி. இம் முயற்சியைப் பின்னுக்குத் தள்ளும் ஆய்வாளர் கிளர்தல் வேண்டும். அக்கிளர்வே இத்தகு ஆய்வால் பெறும் பயனீடாம்; வெற்றியுமாம்.

இதன் மறுபதிப்பு வருவதற்குள் எத்துணையோ இணைச் சொற்கள் கிட்டலாம். அரிய விளக்கங்களும் எய்தலாம். ஆர்வலர் ஆய்வர் துணையாலும் சிறக்கலாம். ஆதலால் இத்தகு நூல்களின் ஒவ்வொரு பதிப்பும், 'பெருக்கமும் திருத்தமும் பெற்று வருதல் மொழிவளப் பெருக்கமும் பேறுமாம்.

இனி இணைச் சொற்களின் நுண் பொருள் வேறுபாட்டை அகர முறையில் காணலாம்: