8
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
இரண்டு சொற்களின் பொருள்களுக்கும் நுண்ணிய வேறு பாடுண்மை விளங்கும்.
அடிபிடி ‘என்னும்
இணைச்சொல்லுக்குச்
சண்டை
என்னும் பொருளையே அகரமுதலிதரும். அடி என்பது தாக்குதலையும் பிடி என்பது தடுத்தலையும் குறிப்பன என்னும் விளக்கம் ஆங்குப் பெறுதற்கு இயலாது. அதனை விளக்குதலும் அகர முதலியைச் செய்தாரின் நோக்கு அன்று.
‘அறிகுறி' என்னும் இணைச் சொல்லுக்கு ‘அடையாளம்' என்னும் பொருளையே அகர முதலியால் பெறமுடியும். ஆனால் ‘அறி' என்பது ஒலி, மணம் அருவ அடையாளம் என்றும், ‘குறி’ என்பது தோற்றம், ஒளி, உருவம் முதலிய உருவ அடையாளம் என்றும் விளக்கம் பெற நம் அகர முதலிகளில் இடமில்லை. அகர முதலிக்கு அப்பால் அறிந்து கொள்ள வேண்டிய நுண்ணிய விளக்கப் பொருளை அதில் எப்படி அறிந்து கொள்ள இயலும்? இன்னும் சொல்லப் போனால், இணைச் சொற்களில் பெரும்பாலானவை அகர முதலிகளில் இடமே பெறவில்லை என்றால், அதன் விளக்கத்தைப் பெறவும் கூடுமோ? இலக்கிய வழக்குச் சொற்களே சொற்கள் என்றும், அவற்றைத் தொகுப்பதே தொகுப்பு என்றும் கொண்டுள்ள அடிப்படையைத் தகர்த்து அவற்றின் மேலாக, வழக்குச் சொற்களே வாழ்வுச் சொற்கள். வழக்குச் சொற்களே இலக்கியச் சொற்களுக்கு விளக்கச் சொற்கள், வழக்குச் சொற்களே கலைச் சொல், புத்தாக்கச் சொற்களுக்கு மூலச்சொற்கள் எனக் கொள்ள வேண்டும். அவ்வழக்குச் சொற்களோ கற்றறியா மாந்தரிடத்துக் கரவிலா நிலையில் களிதுளும்பி வழியும் இயல்பின என்பதை உணர்ந்து அவற்றை முற்றாகத் தொகுத்துக் கொண்டு ‘மாசு’ தட்டி ‘மணியாக்கி' அணியாக்கிக் கொள்ள வேண்டும். இது பொதுக் குறிப்பு.
“இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு" என்னும் இப் பொருள், பெரியதோர் ஆய்விற்கும் உரியது. இதன்கண் ஏறத்தாழ நானூறு இணைச்சொற்கள் உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கமும் நுண்பொருள் வேறுபாடும் வழக்கும் எடுத்துக் காட்டும் காட்டப் பெற்றுள்ளன. சொல்லை விளங்குங்கால், அதன் வேர், வேர்ப்பொருள், ஒப்பு, திரிநிலை ஆயனவும் காட்டப் பெற்றுள. பெரும்பாலும் எடுத்துக் காட்டை