இணைச்சொல் அகராதி
இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு
செந்தமிழ்ச் சொல்வளம் பெருக்கமிக்கது; பல்வேறு திறத்தது; பல்வேறு துறையது; வேரும் அடியும் சுவடும் கிளையும் வளாரும் மிலாரும் போலப் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது;
ஒரு பொருள் பன்மொழியாக விளங்குவன, செந்தமிழ்ச் சொல்வளம் காட்டுவன: யானையின் பெயர்களை எண்ணும் நிகண்டு, “ஏழைந்துக்கு மேல் இரண்டு உயர்ந்த யானை” என்று அதன் முப்பத்தேழு பெயர்களை இயம்புதல் அதற்குச் சான்று.
ஒரு சொற் பலபொருளாய் வருவனவும் செந்தமிழ்ச் சொல் வளம் காட்டுவன; அரி என்னும் சொல்லுக்கு மட்டும், நூற்றுப் பதின்மூன்று பொருள்களைக் குறிப்பிடும் தமிழ்ச் சொல்லகராதி இதனை விளக்கும்.
இனி இவையன்றி,வழக்குச் சொற்களாய் வயங்குவன; ணைச்சொற்களாய்த் துலங்குவன; கலைச் சொற்களாய்க் கமழ்வன; பழமொழி உவமை மரபுத் தொடர்களாய்ப் பயில்வன- என்பவனவும் செந்தமிழ்ச் சொல்வளம் காட்டுவனவே.
இப்பல்வகை வளங்களுள் 'இணைச்சொல்' வளம்பற்றிய சுருங்கிய ஆய்வே இது. இணைச்சொற்கள் பொருளாலும் எதுகை மோனைத் தொடையாலும் இணைவுற்றவையாம். இவை இலையிரட்டை பூவிரட்டை போலாவாய் விலங்கிரட்டை போல்வன என்க. இரட்டை அல்லது இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கும். தனித்து நின்று தனிப் பொருள் தந்து நிற்பினும் நிற்கும்.ஆதலால், இணைந்த தன்மையால் இணைச் சொற்கள் எனப்படினும் தனிச்சொல் தன்மை உடையவையே இவையாம்.
இணைச்சொற்கள் இரண்டும் ஒரு பொருள் தருவனபோல் தோன்றும். அகர முதலிகளும் இணைச் சொற்களுக்கு ஒரு பொருளே காட்டும். ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்கின்