உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அடிசால் பிடிசால்

அடிசால்

பிடிசால்

இளங்குமரனார் தமிழ் வளம் - 2

2

விதை தெளிப்பதற்காக அடிக்கும் சால்

- தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால். வேளாண்மைத் தொழில் வழியாக வழங்கப் பெறும் இணைச்சொல் இது. சால் என்பது உழுபடைச்சால் என்பதன் சுருக்கம். உழுபடையாவது கலப்பை. மண்ணைக் கலக்க வைக்கும் கலப்பை. பொதுநிலை உழவு விடுத்து, ஆழ உழுதல் சாலடித்தல் எனப்படும். சாலடித்தல் விதை தெளிப்பதற்கும் பாத்தி கட்டு தற்கும் இடனாக அமையும். உழுதடத்தில் விதை போடுதல் ‘சால்விதை’ எனப்படும்.

அடித்துப் பிடித்து

அடித்தல் ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல்.

பிடித்தல்

தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல்.

'மண்தட்டி ஓடிப் பிடித்தல்' என்னும் சிறுவர் விளையாட்டில் ‘அடித்துப் பிடித்து ஓடல்' என்னும் இணைச்சொல் வழங்கும். அடிபிடி

அடி

பிடி

அடித்தல் என்பது முதனிலையளவில் ‘அடி'யென நின்றது.

பிடித்தல் என்பதும் முதனிலையளவில் ‘பிடி' என நின்றது.

அடியும் பிடியும் என உம்மைத் தொகையாய் அமைந்து இணைச் சொல்லாகியது. அடியும் பிடியும் என்பதும் அது.

சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில் தாக்குவாரும் தடுப்பாரும் என இரு திறத்தர் உௗரன்றோ'! தாக்குவார் வினைப்பாடு 'அடி'; தடுப்பார் வினைப்பாடு 'பிடி'.

வெட்சி, கரந்தை; வஞ்சி, காஞ்சி; உழிஞை, நொச்சி; தும்பை, வாகை எனப் புறத் தினைகள் இரு கூறுபட்டு அமைதலை அறிக.

“நீயடித்தால் என்கை புளியங்காய் பிடுங்கவா போகும்”; என்பதும், "குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்; குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்” என்பதும் வழங்கு மொழிகள்.

க்