இணைச்சொல் அகராதி
13
அடியோலை அச்சோலை
அடியோலை- முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை.
அச்சோலை
மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை.
அடிமனை, அடிப்பத்திரம் என்பவற்றில் உள்ள அடி
மூலமாதல் தெளிவிக்கும்.
மூலத்தில் உள்ளது உள்ளபடி, படியெடுப்பது அச்சோலையாம். "மூட்சியில் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை, மாட்சியிற் காட்ட வைத்தேன்" (பெரிய, தடுத்.56) என வருவதில் சுட்டும் படியோலை அச்சோலையாம்.
அச்சடிச் சீலை, அச்சுவெல்லம், வார்ப்பட அச்சு என்பவன வற்றைக் கொண்டு ‘அச்சு’படியாதல் அறிக.
அடுத்தும் தொடுத்தும்
அடுத்தல்
தொடுத்தல்
இடைவெளிப்படுதல்
டைவெளிப்படாமை.
அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர் கதை, தொடர்பொழிவு இவற்றால் தொடுத்தல் பொருளை அறிக.
66
அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா”
-மூதுரை
அடுப்பும் துடுப்பும்
அடுப்பு துடுப்பு
அடுப்பு வேலை
அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை.
அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலையறிந்து, அதில் மாவைப் போடுதலும், போடப்பட்ட மாவு கட்டிப் பட்டுப்