166
இசைத்தமிழ்க் கலம்பகம்
197. இந்தியொழிப்பு
'வந்தேமாதரம் என்னுங்க' என்ற மெட்டு
ப.
இன்னே இந்தியொழி யுங்கள் இனிமேல் இங்கே இன்றமிழே வாழவை யுங்கள்.
து. ப.
முன்னே மறைமலைகள் முனைந்து தடுத்தும் இந்தி
வெந்நோய் எனவே நாட்டில் விரைந்து பரவும் முந்தி (இன்னே)
என்னேனும் தீங்கு வரினே – முன்னமேயதை
ஏற்றவகை தீர்த்திட வேண்டும்.
பின்னே தடுப்பம் எனினே
―
நம் வாழ்விழந்து
பேருமற்றுப் போக நேருமே
சின்னாளின் பின்னிந்தியைச் சிறிதும் எதிர்ப்பவர்க்கும்
எந்நாளும் கடுஞ்சிறை இயலும் கொலைத் தண்டமும் (இன்னே)
198. கம்ப துளசிதாசர் ஏற்றத்தாழ்வு
'மீவல்ல குணதோஷ மேமி' என்ற மெட்டு வகை
பண்
—
(காப்பி)
ப.
துளசி தாசுங் கம்பனாமோ -துறைபோமோ
து. ப.
விளை சீரில்லா இந்தி விழுமுந் தமிழாமோ
1
தாளம் - மூவொற்று
வண்ணந்தொண் ணூற்றாறு வளரும்வண் ணனைவேறு
விண்ணுங்கொள் ளுமாறு விளங்குங்கம் பன்வீறு
(துளசி)
(துளசி)