212
இசைத்தமிழ்க் கலம்பகம்
253. குழந்தைக்குப் பேச்சுப் பயிற்றல்
(பிள்ளைத் தமிழ் முறை)
'சொல்லு பாப்பா' என்ற மெட்டு
பேசு பாப்பா தமிழ் பேசு பாப்பா
ப.
பேசும் அகவையிது பேசு பாப்பா
2.1
பாசி பாசி என்று சொல்லிப் பயில் பாப்பா பாலென்று திருத்தவரும் காலம் பாப்பா
அதைப்
சோசி யென்று சொல்லுவதும் சோறு பாப்பா - தமிழ் சொக்கமாகக் கொச்சையேனும் சொல்லு பாப்பா
2
அம்மா அப்பா என்று நீதான் அழைத்துவரும் – உன் அன்னை தந்தை யிருவரும் முன்னறி தெய்வம் அம்மையப்பன் என்றே ஒரே ஆண்டவனை – நீயும் அழைக்கின்ற காலம் அது பின்னறி தெய்வம்
3
(பேசு)
(பேசு)
அமிழ்தினும் இனியது தமிழ் பாப்பா - அது
அறிவரை மயக்கிய மொழி பாப்பா
குமுதவாய் திறந்தின்று குயில் பாப்பா - உன் குதலையும் இனிமையைத் தரும் பாப்பா
4
(பேசு)
குழலும் யாழும் போலும்உன் குரல் பாப்பா – அது கொம்புத்தேன் போலினிக்கும் கொஞ்சு பாப்பா
மழலை மொழி குழறும் மழ பாப்பா
அது
மதிமிகு வள்ளுவன்சொல் மதி பாப்பா
(பேசு)
5
எளிதாகப் பேசும் மொழிதமிழ் பாப்பா - மூச்(சு)
இழுக்கும் வல்லொலி யதில்இல்லை பாப்பா
தெளிவாகப் பேசி மெள்ளத் தேறு பாப்பா - பின்னர்த்
தேவர் கண்ட நாவலனாய்த் திகழ் பாப்பா
(பேசு)