உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

8

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

அடித்த அடியை அவராலேயே பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. நாகப்பன் அழுது கண்ணீர் வடித்ததற்கு மேலாகவே அவர் கண்ணிர் வடித்தார். இயங்கியை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று இடியுண்ட மரம்போலப் படுக்கையிலே சாய்ந்தார். அழுது அழுது முகமும் வீங்கிவிட்டது.

நாகப்பன் அரசுமீது பெருங்கோபம் கொண்டுதான் இருந்தான். "இப்படியா அடிப்பது? அவருக்குக் கையில் வலிமை ருக்கிறது என்பதை என்னிடம்தானா காட்டவேண்டும் என்று எண்ணி ஏங்கினான். எதுவுமே பேசாமல் ஒரு மூலையில் போய் முடங்கிக்கொண்டான். “இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்; இவருக்கு நாம் என்ன இளைப்பு” என்று அடம்பிடித்துக்கொண்டு எழுந்திருக்கவே இல்லை.

ம்

நேரம் சென்றது; மாலைப் பொழுது போகி போகி இருளு கப்பியது; மணி, அணு அணுவாக நகர்ந்து பன்னிரண்டு ஆகியது. நாகப்பன் அசையவில்லை. பசி பிடுங்கியது. நரம்புகள் இழுத்தன. ஆனாலும் வைராக்கியம் விட்டு வைக்குமா? “எதுவும் வேண்டாம் எனக்கு? இப்படி அடிவாங்கிக்கொண்டு மான மில்லாமல் எழுந்திருக்கவா?” என்று எண்ணிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான்.

ஆனாலும் நாகப்பனையும் அசைத்துவிட்டது. அரசுவின் நிலைமை. படுத்ததிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. தேம்பித் தேம்பிச் சிறுபிள்ளைபோல அழுது அழுது கண்ணீரை ஒழுக விட்டுக்கொண்டு இருந்தார். அடித்துவிட்ட தவறுக்காகவே அரசு அழுகின்றார் என்பதை நாகப்பன் உணர்ந்து கொண்டான். அடி, சிறிது சிறிதாக மறையலாயிற்று. தந்தை என்னும் பற்று அரும்பலாயிற்று. அப்பொழுது தன் உடல், வலியைப் பார்க் கிலும் தந்தையரின் உள்ள வலியே மிகுதியான கொடுமையாகத் தெரிந்தது. இரவெல்லாம் கழிந்து விடியும் நேரமும் வந்து விட்டது. நாகப்பனை இளக்கவுள்ளம் வாட்டத் தொடங்கியது. தந்தையாரின் கட்டில் அருகே சென்றான்.

66

இனி

சய்ய

அப்பா, மன்னித்துவிடுங்கள் அப்பா! அறியாமல் செய்துவிட்டேன். ஒருநாளும் இப்படிச் மாட்டேன்" என்று கசிந்து கண்ணீர் வழியக் கூறினான். “நாகு! நாகு! கொடியவன் நான்; ஆத்திரத்தில் அறிவு கெட்டுவிட்டேன். உன் பிஞ்சுக் கன்னத்தில் எத்தனை அறைபோட்டேன்; ஐயோ!” என்று தன் கன்னங்களில் “படார் படார்” என்று இரண்டு