உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

33

கிழவருக்கு வழக்கமான புன்முறுவல் அன்றிச் சுமைத்துயர் இல்லை. நெஞ்சச் சுமை இருந்தால்தானே தலைச்சுமை கடுக்கும்? நடந்துகொண்டிருந்தார். வழக்கமாகத் தொடரும் சிறுவர்கள்

தொடர்ந்தனர்.

66

நொண்டித்தாத்தா! நொண்டித்தாத்தா!” என்று கத்திக்கொண்டும், நையாண்டி நடை நடந்துகொண்டும் பின் தொடர்ந்தனர். ஒரு சிறுவன் கிழவரை மிக நெருங்கிச் சென்று நொண்டி நொண்டி நடந்தான். “எப்படித் தாத்தா, என் நடை ?” என்று கேட்டான். “ஓ ஓ! நாகப்பனா? வாடா வா! நீயும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாயா? அழகு அழகு!" என்று சிரித்துக் கொண்டு நடந்தார். “ஆமாம், நொண்டித் தாத்தா! என் நடை எப்படி?” என்று மேலும் கேட்டான் நாகப்பன்.

மெதுவாக வந்துகொண்டிருந்த (இன்னியங்கி) மகிழ்வுந்து ஒன்று நாகையா, நாகப்பன் இவர்களுக்கு முன் வந்து நின்றது. நாகப்பன் இன்னியங்கியின் எண்ணைக் கண்டவுடனே திகைத்துப் போனான். அவனுடைய தந்தையார், டாக்டர் அரசுவின் இன்னியங்கி அது. “தன்னை என்ன செய்வாரோ?” என்னும் எண்ணத்தால் முகத்தில் கவலைக் கோடுகள் படர்ந்தன. தலையைத் தாழப் போட்டுக்கொண்டு கால் விரலால் தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தான்.

டாக்டர் அரசு பொறுமையாளர், அருள் மிக்கவர் என்று வட்டாரமே அறியும். இருப்பினும் நாகப்பன் செயலைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டு விட்டார். இயங்கியைவிட்டுக் கீழே இறங்கினார். "பளார் பளார்” என்று கன்னங்களிலே ஐந்தாறு போடு போட்டார். நாகப்பன் கையைப் பிடித்துப் “பர பர” வென இழுத்துக்கொண்டு போய் இயங்கியினுள் தள்ளிக் கதவைச் சாத்தினார்.

66

வேண்டா ாம், வேண்டாம்; விளையாட்டுப் பையன். அவனுக்கு என்ன தெரியும்?” என்று நாகையா தடுத்துப் பார்த்தார். அவர் சொற்களை டாக்டர் பொருட்படுத்தவில்லை. நாகையாவை ஏறிட்டுப் பார்க்கக்கூட இல்லை. ல்லை. 'விர்’ரென்று இயங்கியை அழுத்தினார்.

நாகப்பனுக்கு வயது பதின்மூன்று ஆகிவிட்டது. நான்காம் படிவம் வம் படித்துக்கொண்டிருந்த அவனை அரசு கை நீட்டி அடித்த நாளே கிடையாது. இப்படி அடிக்கும் வேளை ஒன்று வரும் என்று கனவில்கூட நினைத்திருக்க முடியாது! நாகப்பனை