5. நொண்டித் தாத்தா
"நொண்டி, நொண்டி” என்று சொல்லிக்கொண்டே சில சிறுவர்கள் ஓடினர். “நொண்டித் தாத்தா! பாரும். எங்கள் நடை எப்படி?" என்று சிலர் நடந்து காட்டி ஏளனம் செய்தனர். நாலைந்தாகப்போன பற்களோடு முகமலர்ந்து சிரித்துக் கொண்டு நடந்தார் கிழவர்.
முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டுக் காலுக்குப் பதில் மரத்தினால் கால் செய்து வைத்துத் தண்டூன்றிக்கொண்டு திண்டாடித் திண்டாடி நடக்கும் அவரைக் கண்டு இரக்கம் காட்டுவதற்குப் பதில் ஏளனம் காட்டுவது சிறுவர்களின் அறியாமையால்தான். இருந்தாலும் அதைப் பற்றிப் பொருட் படுத்தா உள்ளம் கிழவருக்கு உண்டு-நாள்தோறும் நடை பெற்று வந்த நிகழ்ச்சிகள் அதை உண்டாக்கிவிட்டன என்பதும் பொருந்தும். எத்தனை நாட்கள்தான் “கேலி” செய்பவர்களை விரட்டித் திரியமுடியும்?" துள்ளித் திரியும் சிட்டுப்போன்ற அவர்களை வெருட்டி வெருட்டிக் கீழே விழுந்து கேவலப் படவும் வேண்டுமா? கேலிச் சிரிப்புக்கு ஏற்பப் பதிலுக்கும் சிரித்துவிட்டால் போகிறது. வேறென்ன செய்வது? சிறுவர்கள் கேலி, அடிபோல் வலிக்கவா செய்கிறது?” என்று எண்ணிக் கொண்டு சிறுவர்களோடு சிறுவராகச் சேர்ந்து சிரித்துக் கொள்வார். ஆம்! புன்முறுவலும் இன்சொல்லும் அவர் சொத்துக்கள் ஆகிவிட்டன.
ள
நாகையா என்பது நொண்டிக்கிழவர் பெயர். அவர் தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக்கொண்டு நடந்தார். ஏதேனும் வேலை செய்து கூலி பெற்றுக்கொண்டு வயிற்றை வளர்ப்பதுதான் அவர் தொழில். அவருக்கு வீடும் இல்லை; உற்றார் உறவினரும் இல்லை. பகலிலே ஆலமரத்தடி-இரவிலே மடம். இவையே நாகையாவின் வீடு. நாகையா நினைத்திருந்தால் உயரிய வாழ்வு நடத்தியிருக்கலாம். ஆனால் நாகையாவின் மான உணர்ச்சி விடவில்லை.
தள்ளாடித் தள்ளாடி நடக்கும் அவர் தலையிலே பெருஞ் சுமையும் இருந்தால்? பெருந்திண்டாட்டம் தானே! ஆனால்