உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

31

“நல்லது”-அறிவானந்தர் வாய் பேசியது. பார்வை எங்கோ

இருந்தது.

வண்டி இன்னும் நிற்கவில்லை. எந்தப் பெட்டியில் ஏறுவது என்று அதிகாரியும் பணியாளும் நோக்கினர். அந்தச் சந்தடியிலே “சாரதேவ்” வேறொன்றை நோக்கினார். ஆம்! ஒரு கணப்பொழுதில் சாரதேவ் தலையும் உடலும் வெவ்வேறாகத் துண்டிக்கப்பட்டு விட்டன.

66

‘ஓ” வென்று கதறினார் அதிகாரி.

கன்னத்திலே கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார் கணக்கராக இருந்த துப்பறியும் பணியாள்.

கோவிந்ததேவ் படத்தை எடுத்துப் பார்த்தார் அதிகாரி. துண்டிக்கப்பட்டுத் தண்டவாளத்தருகே கிடந்த "சாரதேவ் லையும் பார்த்தார். மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

66

"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று."