உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் – 8 8

மற்றொன்றில் துப்பறியும் அதிகாரியின் புகைப்படம் இருந்தது. அதிகாரி திகைத்துப் போனார் தம் படத்தினைப் பார்த்தவுடன்.

66

66

இதனை எப்படிச் சம்பாதித்தீர்?” என்றார்.

ல்லை.

நான் குற்றவாளி; பல வகைகளில் குற்றவாளி. ஒவ் வொன்றையும் விளக்கிக்கூறும் நிலைமையில் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்.

“சரி, கோவிந்த தேவ் என்ன ஆனார் என்று தெரியுமா?” “தெரியாது”

"இதோ பாரும்” என்று ஒரு படத்தினைக் காட்டினார் அறிவானந்தர் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்போல் ஆனது. கோவிந்ததேவ் தலைவேறாக, கால் கைகள் வேறாகத் துண்டிக்கப்பட்டுப் புகைவண்டிப் பாதையிலே கிடக்கும் நிலையைக் காட்டும் படம் அது.

இக்கடிதத்தைப் படியும்” என்று அதிகாரி அறிவானந்தரிடம்

நீட்டினார்.

"சாரதேவ்! என் உயிர் நண்ப! கூட்டுவணிகத் தோழமை கருதி என் பொருளையெல்லாம் கொள்ளை கொண்டாய். என் பொருள் மட்டும் போதுமா? என் உயிரையும் கொண்டு போக மறந்துவிட்டாயே. அன்பா கேள்; நன்றாகக் கேள். என் உயிர் ஒரு நொடியில் போகிவிடும், அதற்கு ஆயத்தமாகிவிட்டேன். நொடி நொடிதோறும் செத்துப் பிழைக்க இருக்கும் உன்னை நினைக்கத் தான் வேதனையாக இருக்கிறது.

உன், கோவிந்த தேவ்.

பித்துக்கொண்டவர் போலானார் அறிவானந்தர். 'கோவிந்ததேவ், கோவிந்ததேவ்” “கொடுமை, கொடுமை என்று கத்தினார். வாயைப் பொத்திக்கொண்டு விம்மினார். அதிகாரியால் அறிவானந்தர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கணக்கர் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். குறுக்கிடாவிட்டால் ‘ஓ’வென்று கதறியிருப்பார்.

கடமை

கரும்புகையைக் கக்கிக்கொண்டு புகை வண்டி வந்தது. “மன்னிக்க வேண்டும்; எங்கள் கடமையை ஆற்றுவதில் இனிக் கருணையை எதிர்பார்க்க இயலாது. இவ்வண்டியிலே நாம் புறப்படவேண்டும்” என்றார் துப்பறியும் அதிகாரி.