உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

37

பெரு மூச்சுகளுக்கிடையே நடந்தார் நாகையா. நாகப்பன் பின் தொடர்ந்தான். “நாகப்பா! வீட்டுக்கு வருவேன். ஆனால் அங்கேயே இருக்கமாட்டேன். இருக்குமாறு வற்புறுத்தவும் கூடாது” என்று சொன்னார். வீடும் நெருங்கிவிட்டது.

“உங்களை

இரண்டு நாட்கள் கழிந்தன. நாகையா சொன்னார்; “உழைப்பு இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. உழையாமல் உணவுக்குக் கேடாய் இருக்கும் வாழ்வு இழிவானது, வெறுக்கத் தக்கது; நான் இங்கிருக்கவேண்டுமானால் உழைப்பு வேண்டும் வேலை வாங்கும் அளவுக்கு அழுத்த மான மனம்வர மறுக்கிறதே” என்றார் அரசு. “உழைப்பு இல்லாமல் உண்டுகொண்டிருக்கும் புழுத்த மனம் எனக்கு வர மறுக்கின்றது” என்றார் நாகையா. பெருஞ்சிக்கலாக இருந்தது; “உங்களுக்கு அழுத்தமான மனமும் வரவேண்டாம்; புழுத்த மனமும் வர வேண்டாம். நான் செய்கிறேன் வழி; இந்தத் தலைப்பாகையையும், சட்டையையும் மாட்டிக்கொள்ளுங்கள். இன்று முதல் நோயாளர் விடுதி மேற்பார்வையாளர் நீங்கள். உழைக்கு மட்டும் உழைத்துக் கொண்டிருங்கள்; போதுமா?” என்றான் நாகப்பன். அரசு நாகப்பனை அணைத்துக்கொண்டார். நாகையா தலைப்பாகை, சட்டையை வாங்கிக் கொண்டு நோயாளர் விடுதிக்கு நடந்தார். அன்று விடுதியின் முகப்பிலே நாகப்பன் ஒரு பலகையை மாட்டினான், அதில்

66

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”

என்னும் குறள்மணி பொறிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து நாணத்தால் தலை கவிழ்ந்தார் நாகையா!