உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

1.

வேதப் பொருளின் தாழ்வை மறைத்தல்.

2.

3.

66

வேதமோதிப் பிழைக்கும் தொழிலை ஆரியப் பூசாரிகட்கே

உரிமை யாக்கல்.

அவ்வக்கால அறிவு வளர்ச்சிக் கேற்ப, வேண்டிய பகுதிகளை இடைச்செருகல்.

ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்”

என்பது, கோதமர் பெயரிலுள்ள திருவள்ளுவ வெண்பா மாலைச் செய்யுள்.

பொதுவாக ஆரியர் என்று சொல்லப்படும் பிராமணர், முதற்கண் சிந்துவெளியிலிருந்து பின்னர்ப் பிரமவர்த்தத்திற்கும், அதன் பின் மத்திய தேசத்திற்கும் பரவினர். சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்டது பிரமவர்த்தம். சரசுவதி மறைந்த வினசனத்திற்குக் கிழக்கும், பிரயாகைக்கு மேற்கும், பனிமலைக்குத் தெற்கும், விந்தியமலைக்கு வடக்கும் உள்ள நாட்டுப்பகுதி மத்திய தேசம். இராமாயணக் காலத்தில் பிராமணர் மத்திய தேசக் கிழக்கெல்லை அடைந் திருத்தல் வேண்டும். சிந்து என்னும் பெயர்

ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமை யாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திராவிடர் மேலை யாசியாவிற்கும் அதன் பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்ப ராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப்பெயராகவே யிருக்கலாம்.

சிந்துதல் சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப் பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளி யாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப் படும்.

66

தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற்

கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான்

என்பது முகில் துளி சிதறுதலையும்,

(குறுந்.120)

CC

அருவி யன்ன பருவுறை சிதறி யாறுநிறை பகரு நாடனை

(குறுந்.121)

என்பது ஆறு துளி சிதறுதலையும் குறித்தன.