உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இயன்மொழியாயும் ஒரே மொழியாயும் வழங்கிய தனால் நீண்ட காலமாக அதற்குச் சிறப்புப் பெயர் ஏற்பட வில்லை; மொழியென்னும் பொதுப்பெயரே வழங்கிற்று. வடக்கே செல்லச் செல்ல மொழி மெல்ல மெல்லத் திரிந்தது. அதனால் வடநாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். பின்னர்த் தென்னாட்டு மொழிக்குத் தமிழ் என்னும் பெயர் தோன்றிற்று.

-

தமிழ் திரிந்து தமிழர்க்கு விளங்காக் கிளைமொழியாய் மாறியபோது, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் என்று திரிந்தது. (தமிழ் தமிழம் - த்ரமிள - த்ரமிட - த்ரவிட - திரவிடம் திராவிடம்.) அதனால், தமிழினின்று திரிந்த மொழி திராவிடம் எனப்பட்டது. அது முதற்கண் ஒன்றாயிருந்து பின்பு பலவாகக் கிளைத்தது. முதன் முதலாகத் திரிந்த திரவிடமொழி தெலுங்காதலால் அது வடகு (வடநாட்டு அல்லது வடக்கத்து மொழி) எனப்பட்டது. அது பின்னர் வடுகு எனத் திரிந்தது. வடுகு என்பது அம்மீறு பெற்று வடுகம் எனவும் வழங்கும். வடகு என்பது ன்று கன்னடத்திற் படகு என்று திரிந்துள்ளது. நீலமலையில் வாழும் கன்னடத் திரிமொழியாளர் படகர் எனப்படுதல் காண்க.

கு

-

அண்மையிற் பிரிந்த மலையாளம் நீங்கலாகத் திரவிட மொழிகளெல்லாம் வடபாலே வழங்குவதும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் சிதைந்தும் சிறுத்தும் சிதறியும் இலக்கண விலக்கியம் குன்றியும் இன்றியும் போவதும், இந்தியாவிற்கு வெளியே வழங்காமையும், இன்று தமிழும் ஓரளவு திரிந்துள்ளமையும், குமரிநாட்டுத் தமிழே இற்றைத் தமிழுக்கும் எல்லாத் திரவிட மொழிகட்கும் தாயென்பதைத் தெரிவிக்கும்.

மொழிகளின் அல்லது சொற்களின் இயல்பும் திரிபும் நோக்காது, சிறிதும் பெரிதும் வடிவொப்புமை யொன்றையே நோக்கி, தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் வட மேலை நாட்டி னின்று வந்திருக்கலாமென்று, வரலாற்றாசிரியர் மட்டுமன்றி மொழி நூலறிஞரும் மயங்கி இடர்ப்படுகின்றனர். சொற்களின் வேரும் வரலாறும் அறியின் அங்ஙனம் இடர்ப் படார். எடுத்துக் காட்டாக, ஒரு தெலுங்குச் சொல்லையும் ஒரு பிராகுவீச் சொல்லையும் எடுத்து ஈண்டு விளக்குவாம்.

=

தெலுங்குச் சொல் : மாட்டாடு, மாட்லாடு. மாறு-மாற்றம் மாறிச்சொல்லும் சொல், சொல். மாற்றம் - தெ. மாட்ட.