உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஏனை நூல்கள்

49

“வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க.” (தொல். புறத். 5)

66

99

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின். (தொல். புறத். 16) என்பவற்றால், வாள் வில் வேல் முதலிய படைக்கலப் பயிற்சி நூல்களும்,

"தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூவகை நிலையும் உ

99

(தொல். புறத். 17)

என்பதனால், யானைநூல் குதிரைநூல் என்பனவும், அக்காலத் திருந்தமை உய்த்துணரப்படும்.

99

முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்

(தொல். புறத். 10)

99

(தொல். புறத். 12)

66

வருபகை பேணார் ஆரெயில் உளப்பட என்பன மனைநூல் என்னும் தெரிவிக்கும்.

கட்டடநூலிருந்தமையைத்

"தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்

என்பது தேர்த்தச்சையும்,

99

(தொல். புறத். 21)

66

"முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. என்பது கலத்தச்சையும், உணர்த்தும்.

99

(தொல். அகத். 34)

னி, வனைவும் நெசவும் கம்மியமும் போலப் பல கலைகள் எழுதப்பட்ட இலக்கியமின்றியே வழிவழி வழங்கி வந்திருத்தல் வேண்டும், என்பது சொல்லாமலே விளங்கும்.

9. தமிழர் பரவல்

பல

மக்கட் பெருக்கம், வாணிகம், புதுநாடு காணும் விருப்பம், போர், கொள்ளை, பகை, பஞ்சம், கடல்கோள் முதலிய கரணியங்கள்பற்றி, குமரிநாட்டுத் தமிழர் பல்வேறு நிலைகளிற் பல்வேறு திசையிற் பரவிச் சென்றனர்.

தமிழ் வளர்ச்சியடைந்தபின் அவர் பரவிச் சென்றது வடக்கு நோக்கியே. வங்கத் தலைநகர்க்கு இன்றும் காளிக் கோட்டம் என்னும் தூய தென்சொற் பெயர் வழங்குவதே, பண்டை காலத்தே தமிழர் பனிமலைவரை அல்லது கங்கைவரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாம்.