உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தமிழ் இலக்கிய வரலாறு

99

"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே,

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்’

99

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"

"தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"

என்னும் திருவாசக அடிகள், முழுகிப்போன குமரிநாடே பழம் பாண்டி நாடென்பதையும், சிவநெறி துாய தமிழமத மென்பதையும், உணர்த்தும்.

ஆரிய இலக்கியத்தில் வேதம் முந்தித் தோன்றியதனால், வேதம் என்னுஞ் சொல் ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் என நூற் பொதுப்பெயராயிற்று. அங்ஙனமே, மறையென்னும் தென்சொல்லும், 'நரம்பின்மறை’ ( (இ சை நூல்) என்றும் ‘மறையென மொழிதல் மறையோர் (இலக்கண நூலார்) ஆறே’ என்றும் நூற் பொதுப்பெயரானதினால், தமிழிலும் மறைநூலே முதல் நூலோ என்று எண்ணக்கிடக் கின்றது.

'வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்.

என்னும் தொல்காப்பிய நூற்பாவும்

வலியுறுத்தும்.

மெய்ப்பொருள் நூல்

99

அதனை

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

(தொல்.மரபு. 95)

ஒருவாறு

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

(தொல். மரபு.

27)

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்.....

99

(தொல்.

மரபு.90)

என்னும் நூற்பாக்களும், உயிர், மெய், உயிர்மெய், என்னும் எழுத்துப் பெயர்களும், கடவுள் என்னும் தெய்வப் பெயரும், பிறவும், குமரிநாட்டுத் தமிழரின் மெய்ப்பொருளறிவைக் காட்டும்.