உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

தலைக்காலம்

1. குமரிநாடே பழம் பாண்டிநாடு

இந்தியா என்னும் நாவலந் தேயம் முழுதும் ஒருகாலத்தில் தமிழ்நாடாக இருந்ததாகத் தெரிகின்றது. முழுகிப் போன குமரியாற்றை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டால், அதற்குத் தெற்கிருந்த நில மெல்லாம் பழம் பாண்டிநாடும், வடக்கிருந்த நிலமெல்லாம் பனிமலைவரை கீழைப் பகுதி சோழநாடும் மேலைப் பகுதி சேரநாடும் ஆகும்.

பண்டைச் சேரமா வேந்தனாகிய மாவலியின் (மகா பலியின்) மகனான வாணன் (பாணாசுரன்) தலைநகராயிருந்த சோணிதபுரம், கண்ணன் துவாரகைக்கு அண்மையிலிருந்தது, இங்குக் கவனிக்கத் தக்கது.

ன்று பாண்டிநாடு என்று சொல்லப்படும் நிலப்பகுதி, இறுதிக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியன், தன்போல் தப்பிய தன் குடிகளைக் குடியேற்றற்குச் சோழ நாட்டினின்றும் சேரநாட்டினின்றும் கவர்ந்து கொண்டதே.

66

“அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லை யிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க்கூற்றமு மென்னு மிவற்றை இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் தன்னவன்" என்று அடியார்க்கு நல்லாரும்,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்

புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

என்று நல்லுருத்திரனாரும், உரைத்தும் பாடியுமிருத்தல் காண்க. இனி,