உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

57

அடிமைப்படுத்தி விட்டனர். இதற்கு அவர் வெண்ணிறமும் வேதமொழியின் எடுப்பொலியும் துணை நின்றன. இருசார் பழங்குடி மக்களும் ஏமாற்றப்படுவதற்கு, அவர் பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடைமடமும் ஏதுவாயிருந்தன.

விரல்விட் டெண்ணக்கூடிய ஒரு சிலரான ஆரியப் பூசாரியரே, தென்னாடு வந்து தமிழரொடு தொடர்புகொண்டு அவர் மொழியையும் இலக்கியத்தையுங் கற்று, தமிழெழுத் தினின்று கிரந்த எழுத்தையமைத்து, ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை வேதமொழியொடு கலந்து சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய மொழியைத் தோற்றுவித்து, தமிழ் நூல்களையெல்லாம் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்தபின் மூல நூல்களையழித்துவிட்டு மொழி பெயர்ப்பு மொழி பெயர்ப்பு நூல்களையே முதனூல்களாகக் காட்டி, இந்திய நாகரிகம் ஆரியர் கண்டதென மேலையரும் நம்புமாறு நாட்டி விட்டனர்.

தமிழிலக்கியம், குமரிநாட்டு மக்களான ஒரு பேரினத் தார், கற்காலம் முதல் இருப்புக்காலம் வரை பன்னெடுங் காலமாக வளர்த்து வந்த பல்துறை நாகரிகப் பண்பாட்டின் விளைவென் றும்; சமற்கிருத இலக்கியம், ஒருசில வந்தேறிகள், ஐந்திலிரு பகுதி தமிழாயுள்ள இலக்கியக் கலவை மொழியில்,

சமற்கிருதமென்னும்

தமிழிலக்கியத்தை

மொழிபெயர்த்தும் விரிவுபடுத்தியும் மாற்றியும் அமைத்ததென்றும்; வேறு பாடறிதல்

வேண்டும்.