உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தமிழ் இலக்கிய வரலாறு

வட திசையையும் வடகாற்றையும் குறிக்கும். வடந்தை என்னும் சொல் வடகாற்றையுங் குறிப்பதும், வடகாற்றின் பெயரான வாடை என்பது வடவைக்கும் பெயராக வழங்கு வதும், ஒப்புநோக்கத்தக்கன.

ஆரியர் வடவை என்னும் தென்சொல்லை வடவா அல்லது படபா என்று திரித்து, முகம் என்னும் சொல்லையுஞ் சேர்த்து, பெட்டைக் குதிரையின் முகத்தில் தோன்றும் நெருப் பென்று பொருள் கூறுவது, பழங்கருநாடகப் பட்டிமருட்டாம்.

10. ஆரியர் திரும்பல்

வட திரவிடர் ஐரோப்பாவின் வடமேற்கிற் காண்டினே வியம் வரை சென்று ஆரியராக மாறியபின், அல்லது ஆரியத் தன்மையடைந்த பின், அவருள் ஒரு சாரார் தென்கிழக்கு நோக்கித் திரும்பி இத்தாலி யாவிலும் கிரேக்க நாட்டிலும் குடியேறினர். கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசின கூட்டத்தார், தென்கிழக்கு நோக்கியே தொடர்ந்து பாரசீக வழியாக வந்து இந்தியாவிற்குட் புகுந்தனர். வட இந்தியாவிலிருந்த பிராகிருதப் பேரினத்தொடு கலந்து போனதனால், அவர் மொழியும் பிராகிருதத்தொடு இரண்டறக் கலந்து, எகர ஒகரக் குறில்களை யிழந்தது. அக் கலவை மொழியிலேயே வேதம் இயற்றப்பட்டது.

ஆரிய மாந்தர் நூற்றிற்குத் தொண்ணூற்றொன்பதின்மர் பிராகிருதப் பழங்குடி மக்களொடு கலந்து போனாலும், ஆரியப் பூசாரியர்மட்டும் பிரிந்துநின்று, வேதவாயிலாகவும் வேள்விகள் மூலமாகவும் ஆரியப் பழக்கவழக்கங்களை அவியாது காத்து வந்திருக்கின்றனர். ஆரியம் என்னும் மொழிப்பெயரும் ஆரியன் என்னும் இனப்பெயரும், இந்திய ஆரியரிடையே முதன்முதல் தோன்றி ஏனை நாடுகளிலும் மாக்கசுமுல்லர் வாயிலாகப் பரவியுள்ளன.

வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக ராகவேயிருந்ததனால், அவர் பூசாரியரும் எழுத்தறியாதவ ராகவேயிருந்தனர். ஆயின், வேத மந்திரங்களை மனப் பாடமாக ஓதி வந்ததனால் நினைவாற்றலும், தம் மேம் பாட்டைக் காத்து வந்ததனால் சூழ்ச்சித் திறனும், அவர்க்கு மிகுதியாக இருந்தன. அதனால், வடநாட்டுப் பிராகிருதப் பழங்குடி மக்களைப் போன்றே தென்னாட்டுத் தமிழப் பழங்குடி மக்களையும், தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம் வேத மொழி தேவமொழி யென்றும் ஏமாற்றி