உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நாவாய்

L. navis = ship OF. navie = fleet, E. navy = a fleet. நாவாய் (பெருங்கலம்) - வ. நௌ

நங்கூரம்

= படகு.

55

E. anchor, OE. ancor, L. ancora, Gk. ankura, OHG. anchar, LG., MHG. anker, ON. akkeri, Sw. ankare, Da. anker, OF ancre, It. ancora, L. anchora. நாங்கூலம் நாங்குளு (நாங்கூழ்), மண்ணைத் துளைப்பதுபோல் நிலத்தைத் துளைத்து உழும் கலப்பை. தெ. நாகேல. வ. லாங்கல, த. நாங்கூலம்-நாங்குல்-நாஞ்சில் கலப்பை.

=

நாங்கூலம்-நாங்கூரம்-நங்கூரம்-நங்குரம் = கப்பலை நிறுத்தும்

கலப்பை வடிவான இருப்புக் கருவி. பார. லங்கர்.

வளைவைக் குறிக்கும் ank என்னும் வினை முதனிலை யினின்று anchor என்னும் சொல் திரிந்துள்ளதாக, ஆங்கில அகரமுதலிகள் கூறும். அஃதுண்மையாயின், அதுவுந் தமிழ் வழியே.

வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கணம் = வாட்டஞ்சாட்டமான சாலகம் (சாய்கடை). இனி, வடபார் முனையில் அவ்வப்போது தோன்றும் ஒருவகை மின்னொளியையுங் கண்டு, அதற்கு வடவை அல்லது வடந்தை எனப் பெயரிட்டனர் குமரிநாட்டுக் கடலோடிகள்.

ஊழியிறுதி

யுலகழிவு நெருப்பினால் நேருமென்று சிவநெறியார் நம்பினதினால், அவ் வடவையே அந் நெருப்பின் மூலமாயிருக்கு மென்று ஒரு கருத்தெழுந்தது. அதனால் அதை உத்தரமடங்கல் என்றனர்.

உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன். உத்தரமடங்கல் என்பது உத்தரம் என்று சுருங்கியும் வழங்கும்.

வடக்கிலுள்ள நெருப்பு என்னும் பொருளில், அது இலக்கியத்தில் வடவைக் கனல், வட அனல் என்றும் பெயர் பெறும்.

மேலையர் வட வையை Aurora borealis என்பர். அதற்கு வட விடியல் அல்லது வடவெளிச்சம் என்று பொருள். Borealis என்பது