உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழ் இலக்கிய வரலாறு

ஆதலால், செந்தமிழ்நாடு குமரிநாட்டைச் சேர்ந்ததாக

வேயிருத்தல் வேண்டும்.

"செந்தமிழ் நாடே

மன்ற வாணன் மலர்திரு வருளால்

தென்தமிழ் மகிமை சிவணிய செய்த

அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும்

படியின்மாப் பெருமை பரவுறுஞ் சோழனும்

சைவமா தவருந் தழைத்தினி திருந்த மையறு சோழ வளநா டென்ப”

என்பது, நாட்டுவெறிமிக்க ஒரு சோழ நாட்டான் கட்டிய தாகும்.

3. முக்கழக வுண்மை

முற்பட்ட தனித்தமிழ்

ஆரிய வருகைக்கு நூல்கள் அத்தனையும், முன்னைத் தமிழர் நாகரிகத்திற்குச் சான்றும் பின்னைத் தமிழர் முன்னேற்றத்திற்குத் துணையும் ஆகாத வாறு, அழிக்கப்பட்டுவிட்டன. மொழியாராய்ச்சியும் நடு நிலையும் நெஞ்சுரமும் இல்லாத வையாபுரிகட்கும் தொடை நடுங்கிகட்கும், வ் வுண்மையைக் காணும் அகக்கண் இல்லை.

தமிழ், வரலாற்றிற் கெட்டாத உலக முதற்றாய் உயர்தனிச் சம்மொழி யாதலாலும், ஆரிய வருகை முன்னைத் தமிழிலக் கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதனாலும், இறைய னார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ள முக்கழக வரலாறு, முற்காலச் செய்திகளும் பிற்காலச் செய்திகளும் மயங்கி, நடுநிலையாராய்ச்சி வல்லுநர் அல்லாதார் சிக்கறுக்க முடியாப் பெருமுடிச்சாய்க் கிடக்கின்றது.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன்

99

என்னும் இளங்கோவடிகள் கூற்று, பொல்லாப் புன்சிறு பொய்ம் மொழியாய் இருத்தல் எவ்வகையிலும் இயலாது.

அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார வுரையில், முழுகிப் போயினவாகப் பெயர் குறித்துக் கூறிய ஏழேழ் நாடுகளும் பிறவும் பற்றிய செய்தியும், கட்டுக் கதையாய் இருத்தல் முடியாது.