உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

61

நடுவ(ண்) மாநிலம், இராசத்தானம், உத்தர மாநிலம் ஆகிய மூன்றும் கலக்கும் நடுவ மிசைநிலங்களில் (Central Highlands ) வாழும் பீலர் (Bhils) என்னும் காடுவாழ் குலத்தார், தமிழ்நாட்டினின்று வடபாற்சென்ற வில்லியர் என்னும் வகுப்பாரின் வழியினரே.

தமிழ், ஒருகாலத்தில் வடநாட்டிலும் பேச்சு மொழியாய் வழங்கி, பின்னர் இலக்கிய மொழியாய்ச் சுருங்கி,அதன்பின் அரசோலை மொழியாக வொடுங்கி, இன்று வேர்ச்சொல் மொழியாக மறைந்து நிற்கின்றது.

2. பழம் பாண்டிநாடே செந்தமிழ்நாடு

தமிழ் தோன்றி வளர்ந்ததும், பண்படுத்தப் பட்டதும், செம்மை வரம்பிடப்பட்டதும், பழம் பாண்டிநாடே. குமரி நாட்டுத் தமிழரே தமிழைச் செம்மைப்படுத்தினதனால், அவர்களே அச் செம்மை திறம்பியிருக்க முடியாது.

தொல்காப்பியத்திற்குச்

பனம்பாரனார்,

"வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

சிறப்புப்பாயிரம்

இயற்றிய

வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி

என்று பாடியபின், மீண்டும்,

99

"செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி

99

என்று கூறுவதால், அப் பிற்கூற்று முழுகிப்போன பழம் பாண்டி நாட்டையே குறித்ததாகல் வேண்டும்.

மூவேந்தர் நாடும் தமிழ்நாடாகவே யிருந்தும், பாண்டியன் மட்டும் தமிழ்நாடன் என்று சிறப்பித்துக் குறிக்கப் பட்டமை கவனிக்கத் தக்கது.

"செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன்

99

(திவா. 2)

பிற்காலத்துப் பாண்டிநாடான நெல்லை மதுரை முகவை மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிற் போன்றே செந்தமிழ் வழங்காது ஒருவகைக் கொடுந்தமிழே வழங்கி வருகின்றது.