உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தமிழ் இலக்கிய வரலாறு

வேதக் காலத்தில் ஆரியப்பூசாரியர் வடநாட்டுச் சிவக்குறி (சிவலிங்க) வழிபாட்டினரை ஆண்குறிவணக்கத்தார் (சிசின தேவர்) என்று பழித்ததையும், எண்ணிக் காண்க.

முதற்காலத்தில் காளி பாலைநிலத் தமிழத் தெய்வமா யிருந்ததையும், வங்கநாட்டுத் தலைநகர் காளிக்கோட்டம் என்னும் தூய தமிழ்ப்பெயர் தாங்கி நிற்றலையும், கூர்ந்து நோக்குக.

இன்றும், பிராகுவீ, மாலத்தோ முதலிய திரவிட மொழிகள் வடஇந்தியாவில் வழங்குவதும், இந்தியின் அடிப் படைச் சொற்கள் தமிழ்த் திரிசொல்லாயிருப்பதும், பொதுவாக வட இந்திய

மொழிகளின்

சொற்றொடரமைப்பு தமிழ்ச் சொற்றொட பதும், ஒருகாலத்தில் தமைக்குச் சான்று

ரமைப்பைப் பெரும்பாலும் ஒத்திருப் வடஇந்தியாவிலும் தமிழ் பரவியிருந்

பகரும்.

வேதக்காலத்திலும் வடஇந்தியாவில் தமிழ அரசரும் வேளிரும் இருந்ததனாலேயே, அகத்தியர் “துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண் குடி வேளிருள்ளிட்டாரையும் அருவா ளரையுங் கொண்டுபோந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதி யின்கணிருந்து" என்று நச்சினார்க் கினியர் தம் தொல்காப்பிய எழுத்ததிகார வுரை முகத்தில் எழுத நேர்ந்தது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பல ஊர்ப்பெயர்கள், வேள் என்னுஞ் சொல்லை நிலைச்சொல்லாகக் கொண்டுள் ளன. பிற்கால நிலைக்கேற்ப, அச் சொல்லின் வகரம் பகரமாகத் திரிந்துள்ளது. தக்காணம் (தெக்காணம்) என்னும் நடுவிந்தியப் பகுதி வேளிரால் ஆளப்பட்டதனால் வேள்புலம் எனப்பட்டது.

அதையாண்ட சளுக்கு மன்னன் வேள்புலவரசன் எனப்பட் டான்.

"வேள்புல வரசர் சளுக்கு வேந்தர்."

"நீயே, வடபான் முனிவன் தடவிலுட் போன்றிச் செம்புனைந் தியற்றிய சேணொடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே

99

(திவா. 2), (பிங்.

5;27)

(புறம். 201: 8-12)

என்னும் புறநானூற்றுப் பகுதியும் ஒரு புனைகதையை உள்ளிடினும், பண்டைக் காலத்தில் தமிழ வேளிர் இந்தியா வரை பரவியிருந் தமைக்குத் தப்பாத சான்றாம்.