உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தமிழ் இலக்கிய வரலாறு

பரிந்து பாடுவது பாடுவது பரிபாடல் என்பர். பரிதல் காதல் கொள்ளுதல் அல்லது காதலால் உருகுதல். கலியும் வெண்பா வுங் கலந்த கலவைப்பாவே பரிபாடல்.

ஞானாமிர்தம்

இது 6ஆம் நூற்றாண்டுபோல், வாகீச முனிவர் கடவுள் கட்டுணி கட்டுகளின் (பதிபசு பாசங்களின்) பொதுவியல்புகள் பற்றி 75 அகவற் பாக்களால் இயற்றிய சிவக்கொண்முடிபு (சைவ சித்தாந்த) நூல். உவமைகளை அடுக்கிக் கூறுவது இதன் சிறப்பியல்பு. இது 5ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென் பதைப் பிள்ளையார் வாழ்த்து தெரிவிக்கும்.

திருமந்திரம்

பண்டைத் தமிழ் யாப்பின் வழிப்பட்ட எழுவகை நிலத்துள் ஒன்றான மந்திரம், முற்றத் துறந்த முழுமுனிவரான தெய்வப் புலவரால் இயற்றப்படுவது.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”.

(தொல். செய்.176)

தொல்காப்பியர் காலத்திற்கு முந்தின தமிழ் மந்திர நூல்கள் யாவும் பெயருந் தெரியாது மறைந்து போயின. இன்றுள்ள மந்திரப் பெயர்மறை திருமூலர் திருமந்திரம் ஒன்றே. அது முப்பது நுவலுரைகளையும் முந்நூறு மந்திரங் களையும், மூவாயிரம் திருமொழிகளையும், சிவக்கொண்முடி

கொண்டது;

பனைத்தையும் முற்றக்கூறும் முழுநூல்.

"மூலன் உரைசெய்த முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த மூன்றுமொன் றாமே".

(திருமந். சை.சி.நூ.ப.க. பதிப்பு. சி.பா. 2)

பழைய விசுவநாத பிள்ளை பதிப்பில் மிகையாகவுள்ள 47 பாவிசைகள், பிற்கால இடைச்செருகலென்று தள்ளத்தக்கன.

மணிமேகலை காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே, சிவநெறிக் கொண்முடிபு (சைவ சித்தாந்தம்) பெரிதும் ஆரிய வண்ண மாக்கப்பட்டு விட்டதென்பது,

'இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்