உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

89

கவனிக்கத்தக்கது. தனியர் மட்டுமன்றி அவை யோரும் சேர்ந்து பாடக்கூடியனவாகவும், உள்ளத்தையுருக்கி இறைவன்பால் உய்க்கக் கூடியனவாகவும், எவரும் இன்புறும் இனிய இசையொடு கூடியனவாகவும், தேவாரப் பாடல்கள் அமைந்திருப்பது, மிகப் போற்றத்தக்கதாகும்.

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பதிகங்களுட் சிறந்தது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்திற்கு மூலமாயிருந்த திருத்தொண்டத் தொகை.

அந் நாயனார் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான்மேற் பாடியவை, ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானவுலாவும் பொன்வண்ணத்தந்தாதியும் ஆகும்.

திருவாசகம்

இது

மாணிக்கவாசகர்

என்னுந்

திருவாதவூரரால்,

சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை 51 தலைப்புகளிற் பாவும் பாவினமுமாகப் பாடப்பட்ட பனுவற்றிரட்டு. இது சிவனடி யார்க்குச் சிறந்த வுருக்க மூட்டுவ தென்பது,

66

'திருவாசகத்திற் குருகார் ஒருவாசகத்திற்கு முருகார்

என்னும் பழமொழியாலும்,

"விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதின் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுந ரன்றி

99

மன்பதை யுலகின் மற்றையர் இலரே என்னும் சிவப்பிரகாச அடிகள் பாட்டாலும்,

"வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

99