உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

99

சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்திநிச்சயம் முதலியன

பதினாலாம் நூற்றாண்டிறுதியில், தொல்காப்பியத் தேவர் என்னும் புலவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடினார்.

பதினாலாம் பதினைந்தாம் நூற்றாண்டுகளின் இடை யிலிருந்த காளமுகில் (காளமேகம்) என்னும் ஒப்புயர்வற்ற கடும்பாப்புலவர் திருவானைக்கா வுலாப் பாடினார். அவர் காலத்தும் பின்னுமிருந்த முடவருங் குருடருமான இரட்டையர், திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், ஏகாம்பரநாத ருலா முதலிய பனுவல்களைப் பாடினர். “கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று ஒரு புலவர் பாராட்டிப் பாடியது கருதத்தக்கது.

வள்ளலும் புலவருமான நெற்குன்றவாணர் என்னும் தொண்டைநாட்டு வேளாளர் தலைவர் ஒருவர், திருப்புகலூர் அந்தாதியைப் பாடியுள்ளார்.

இரண்டாம் பட்டினத்தார் பாடல்கள்

இவை வை 3 கோயிற் றிருவகவல். கச்சித் கச்சித் திருவகவல் திருவேகம்ப மாலை, திருநகர்ப் பாடல்கள், தனிப்பாடல்கள், உடற்கூற்று வண்ணம் என்பன.

பதினைந்தாம் நூற்றாண்டில், வேறெம்மொழியிலும் என்றும் எவராலும் பாடவியலாத நூற்றுக்கணக்கான வண்ணக் குழிப்புகளிற் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற தமிழ்ப் பனுவல், அருணகிரிநாதரின் திருப்புகழ்த்திரட்டே. அது தேவாரம் போன்று இசைத்தமிழிலக்கிய மாகவும் உள்ளது. பதினாறாயிரம் திருப்புகழ் பாடப்பட்டன வென்பது மரபுச் செய்தி. இன்றுள்ளன ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்றே. திருப்புகழ் வண்ணங்கள் நூற்றுக்கணக்கின. அவற்றுட் சிலவற்றின் குழிப்புகள் (வாய்பாடு கள்) வருமாறு:

1. தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன3 தனதான

3

2. தனத்த தத்தந் தத்தன தானன -தனதான.

3. தனத்தத் தந்ததத்தத் தானன தானன‘-தனதான.

4. தனனதன தான தந்த தனனதன தான தந்த

தனனதன தான தந்த

தனதான.