உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழ் இலக்கிய வரலாறு

சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள்ளும் தலைமை யானது சிவஞானபோதமே. அது

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்"

என்பதற்கேற்ப, நாலடி கொண்டவை 3-ம் மூவடி கொண்டவை 8-ம் ஆகப் பன்னிரு நூற்பாவே கொண்டு, பரந்த நூலாக விரியுமளவு உரையைத் தன்னுள் அடக்கியுள்ளது. அதன் ஆசிரியரும் அங்ஙனமே சிற்றுருக்கொண்ட இளம் பருவத் திலேயே

சிவக்கொண்முடிபில் முற்றறிவு வாய்ந்தவ ராயிருந்தார். அதனால், அவர் தந்தையார்க்குக் குலகுருவா யிருந்த அருணந்தி சிவாசாரியாரும் அவருடைய மாணவ ரானார்.

பதினாலாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடவளாக ஆசிரியராயிருந்த தெக்கணாமூர்த்தி தேசிகர், தசகாரியம் உபதேசப் பஃறொடை வெண்பா என்னும் இரண்டு அறிவை (ஞான) நூல்களியற்றினார். அதன்பின் அம் மடவளாகத் தலைவராயமர்ந்த அம்பலவாண தேசிகர் தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாயநிட்டை வெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசயமாலை, நமச்சிவாயமாலை என்னும் பத்து நூல்களை இயற்றினார். இவற்றொடு ஈசானதேசிகர் இயற்றிய தசகாரியமும், பின்வேலப்பதேசிகர் இயற்றிய பஞ்சாக்கரப் பஃறொடையுஞ் சேர்ந்து, பண்டார சாத்திரம் பதினான்கு எனப்பட்டு, சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் துணை நூல்களாய் நிலவும்.

பின்னர் 19ஆம் பட்டத்திற்கு வந்தவர் திருப்பறியலூர்ப்

புராணம் பாடினார். அவர்காலச் சின்னப்பட்டத்தார்

பஞ்சாக்கரப் பஃறொடை, ஞானபூசாவிதி, மரபட்டவணை என்னும் நூல்களை யியற்றினார்.

தருமபுர மடவளாகத்தைச் சேர்ந்த சிற்றம்பல நாடிகள் இயற்றிய நூல்கள் துகளறு போதம், சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம், திருச்செந்தூர் அகவல் முதலியன. அவர் மாணவரான தத்துவப் பிரகாசர், தத்துவப் பிரகாசம் என்னும் நூலை யியற்றினார். சிற்றம்பல நாடிகளின் மாணவரின் மாணவரான கமல ஞானப்பிரகாசர் இயற்றிய நூல்கள், சிவானந்த போதம், பிரசாதக் கட்டளை, அத்துவாக்

கட்டளை, சிவபூசை யகவல் முதலியன. அவர் மாணவரான ஞானசம்பந்த தேசிகர் இயற்றியவை சிவபோகசாரம்,