உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

97

பொய்கையிற் பிறந்த ஆறுமுக ஆரியத் தெய்வமாகக் கதைபுனைந் திருப்பதும், அதைத் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலும் எடுத்துக்கூறுவதும், தமிழத் தெய்வத்தை ஆரியத் தெய்வமாகத் திரித்தற்கேயன்றி, ஆரியத் தெய்வத்தைத் தமிழர் ஏற்றுக் கொண்டனர் என்பதற்குச் சான்றாகா.

அட்டாங்கயோகக் குறள்

இது 2ஆம் ஔவையாரால் இயற்றப்பட்டதுபோலும்! இதை எண்ணுறுப் போகக்குறள் என்னலாம். சிவக்கொண்முடிபு (சைவசித்தாந்த) நூல்கள்

(12ஆம் 13ஆம் 14ஆம் நூற்றாண்டுகள்)

சித்தாந்த சாத்திரம் 14

1. திருவுந்தியார்-திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றியது (1148).

2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றியது (1178).

3. சிவஞானபோதம்-மெய்கண்டதேவர் இயற்றியது (1215

போல்).

4. சிவஞான சித்தியார்

5. இருபா விருபஃது

அருணந்தி சிவாசாரியார் இயற்றியவை

6. உண்மை விளக்கம்-மனவாசகங்கடந்தார் இயற்றியது.

7. சிவப்பிரகாசம்,

8. கொடிக்கவி,

9. உண்மை நெறிவிளக்கம்,

இவை

10. நெஞ்சுவிடுதூது,

11. வினாவெண்பா,

12. திருவருட் பயன்,

உமாபதிசிவாசாரியாரால் இயற்றப்பட்டவை

13. சங்கற்ப நிராகரணம்,

14. போற்றிப்பஃறொடை

கோயிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர்

புராணசாரம் என்பனவும், உமாபதி சிவாசாரியார் இயற்றி னவை

என்பர்.