உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

109

தருமபுரம் 10ஆம் பட்டத்தி லமர்ந்திருந்த சிவஞான தேசிகர் பால் அறிவை நுவற்சி (ஞானோபதேசம்) பெற்ற சிதம்பரநாத முனிவர், குறட்பாவால் நித்திய கன்மநெறி என்னும் நூலியற்றினார்.

திருமறைக்காட்டில் அருளூண் வேளாளர் குலத்திற் பிறந்து, இளமையிலேயே தென்மொழி வடமொழி யிரண்டுங் கற்றுத் தேர்ந்து, திரிசிரபுரத்தில் ஆட்சி செய்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்காளராயிருந்து, அவரிறந்தபின் அரசியின் காதலுக்குத் தப்பியோடி, தம் தமையனாரின் கட்டாயத்திற் குட்பட்டு ஒரு பெண்ணை மணந்து ஒரு குழந்தை பெற்று அவள் இறந்துபோனபின் துறவுபூண்டு மௌன குருவிடம் அறிவையுரை பெற்று, திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டைத் தாயுமானவர் மடத்தில் தங்கி ஓகிருந்து, கடவுட் பற்றும் பத்திச்சுவையும் துறவுணர்ச்சியும் ததும்பி வழியும் பல்வேறு திருப்பாடல்களைப் பாடி, நொசிப்புற்ற (சமாதி யடைந்த) தாயுமான அடிகள், திருவெண் காடர் என்னும் பட்டினத்தடிகட்கு அடுத்தபடியாகத் தமிழராற் போற்றப்படும் துறவியாராவர். அவர் பாட்டுகளுள் மூன்று வருமாறு: 'அங்கிங் கெனாதபடி யெங்கும்ப்ர காசமாய்

66

ஆனந்த பூர்த்தி யாகி

அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினில்

தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் தந்தெய்வம் எந்தெய்வமென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய் என்றைக்கும் உள்ள தெதுமேல்

கங்குல் பகலறநின்ற எல்லையுள தெதுவது

கருத்திற் கிசைந்ததுவே

கண்டனவெ லாமோன உருவெளிய தாகவும் கருதியஞ் சலிசெய்குவாம்.

99