உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழ் இலக்கிய வரலாறு


"கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றுமறி வில்லாதஎன்

கர்மத்தை யென்சொல்வேன் மதியையென் சொல்வேன் கைவல்ய ஞானநீதி

நல்லோர் உரைக்கிலோ கர்மமுக் கியமென்று

நாட்டுவேன் கர்மமொருவன்

நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் வடமொழியிலே

வல்லான் ஒருத்தன்வர வுந்திரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்

வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனமே வடமொழியில் வசனங்கள் சிறிதுபுகல்வேன்

வெல்லாமல் எவரையும் மருட்டியிட வகைவந்த

வித்தையென் முத்தி தருமோ

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே.

99

"பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்ச வாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க மனமும்

நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின் நாணுமென் னுளநிற்றிநீ

நான்கும் பிடும்போ தரைக்கும்பி டாதலால் நான் பூசை செய்யன் முறையோ விண்ணேவிண் ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே

மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேயவி வித்தின் முளையே கண்ணே கருத்தே யென்எண்ணே யெழுத்தே கதிக்கான மோனவடிவே

கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு

கருணாகரக் கடவுளே.

99

பாண்டிநாட்டுத் திருக்குற்றாலத் தருகிலுள்ள மேலகரத் தில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர், குற்றாலத் தல புராணம், குற்றாலமாலை, குற்றாலச் சிலேடை, குற்றால யமக வந்தாதி முதலிய பனுவல்களைப் பாடினார்.

தஞ்சைச் சரபோசி மன்னர் காலத்தவரான ஒப்பிலா மணிப்

புலவர், சிவரகசியம் என்னும் பெருநூலை இயற்றினார்.