உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

111


சீகாழி அருணாசலக் கவிராயர் (1712-77) சீகாழிப் புராணம், சீகாழிக் கோவை என்னும் பனுவல்களைப் பாடினார்.

சரபோசி மன்னர் அவையைச் சேர்ந்த அபிராமிபட்டர் அபிராமியந்தாதியைப் பாடினார்.

யாழ்ப்பாணத்துச் சுன்னாக வூரரான வரத பண்டிதர் என்னும் சிவப்பிராமணர், சிவராத்திரிப் புராணம் பாடினார். அவருக்குப்பின் பாண்டிநாட்டு நெல்லைநாதர் பாடிய சிவ ராத்திரிப் புராணமும் ஒன்றுண்டு.

பாண்டிநாட்டு விக்கிரமசிங்கபுரத்தில் வாழ்ந்த நமச் சிவாயக் கவிராயர் உலகம்மை யந்தாதி, சிங்கைச் சிலேடை வெண்பா முதலியவற்றைப் பாடினார்.

சோழநாட்டுத்

தண்டலை ல யூரினரான

கவிராயர் தண்டலையார் சதகம் பாடினார்.

அம்பலவாணக் கவிராயர் அறப்பளீசுர குருபாததாசா குமரசே சதகமும் பாடினர்.

சாந்தலிங்கக்

சதகமும்,

திருநெல்வேலிக் கடுத்த சந்நியாசி யூரரான பகழிக் கூத்தர், திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடினார்.

சிவன்பாக்கத்துச் சிவனியத் துறவியாரான ஞானக் கூத்தர் விருத்தாசலப் புராணம் பாடினார்.

மார்க்கசகாய தேவர் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் பாடினார்.

தலைமலைகண்டதேவர் நெல்லைநாட்டு மருதூரீசர் மீது மருதூர் யமக வந்தாதி பாடினார்.

தில்லைக்கருகில் வதிந்த மாரிமுத்துப் பிள்ளை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடுதூது என்னும் பனுவல் களைப் பாடினார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டி நாட்டு விக்கிரமசிங்கபுரத்தில் அருளூண் வேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என்பவரின் அருந்தவ மகனாகத் தோன்றிய முக்களாலிங்கர் இளமையிலேயே தென்மொழி வடமொழி யிரண்டுந் தெள்ளிதிற் கற்று, திருவாவடுதுறை வளாகத் தலைவராயிருந்த பின்வேலப்ப தேசிகரிடம் அறிவையுரையும் சிவஞானயோகி என்னுஞ் சிறப்புப் பெயரும் பெற்று, பல மாணவரை பயிற்றிச் சிறந்த புலவராக்கிப் பல நூல்களும்

6