உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

(5) திருமுக்கூடல்

தமிழ் இலக்கிய வரலாறு

நெல்லைநாட்டு முக்கூடலில், ஒரு வேதக்கல்லூரியும் அதைச் சேர்ந்த மருத்துவசாலை யொன்றும் இருந்ததாக, வீரராசேந்திரன் கல் வெட்டொன்று (1067) குறிக்கின்றது.

கல்லூரியில் இருக்கு எசுர் வேதங்களும் ரூபாவதாரமும் வியாகரணமும் கற்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வேதத்திற்கும் ஓராசிரியரும் 10 மாணவரும், வியாகரணத்திற்கு ஓராசிரியரும் 20 மாணவரும் இருந்தனர்.

மாணவருக்கு விடுதி,

லவசவூண், படுக்கப் பாய், காரி(சனி) முழுக்கெண்ணெய், இராவிளக்கு, இரு வேலைக் காரிகள் முதலிய ஏந்துகள் (வசதிகள்) இருந்தன.

ஆசிரியர் சம்பளம், வேத ஆசிரியர்க்கு அன்றாடம் பதக்கு நெல்லும் ஆண்டிற்கு 4 பொற்காசும்; வியாகரண ஆசிரியர்ககு அன்றாடம் 1 தூணி நெல்லும் ஆண்டிற்கு 10 பொற்காசும்.

ம்

மருத்துவசாலையில், ஓர் அறுவை மருத்துவரும் மூலிகை இருவரும் இருந்தனர். நோயாளிகட்கு

காணரிகள்

படுக்கைகளும் இருந்தன.

(6) திருவாவடுதுறை

15

திருவாவடுதுறையில் ஒரு மடத்தில் ஒரு மருத்துவப்பள்ளி நடைபெற்று வந்ததாக, விக்கிரமச் சோழன் 3ஆம் ஆண்டுக் (1121) கல்வெட்டொன்று குறிக்கின்றது.

மருத்துவம், வாகடம், ரூபாவதாரம், வியாகரணம் என்பன

அங்குக் கற்பிக்கப்பட்டன.

(7) பெருவேளூர்

தென்னார்க்காட்டைச் சேர்ந்த பெருவேளூரில், வேதமும் சாத்திரமும் வல்ல 10 பட்டர், 1 சிவாச்சாரியார், 1 மருத்துவர் ஆகியோருக்கு 12 வேலி நிலமும் குடியிருக்க வீடுகளும் கொடுக்கப்பட்டதாக, இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் 13ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று குறிக்கின்றது.

(8) திருவொற்றியூர்

திருவொற்றியூரில் பாணினீயங் கற்பிப்பதற்கு வியாகரண தான மண்டபம் என ஒன்று கட்டப்பட்டிருந்ததென்றும், அதற்கு 65 வேலி நிலங் கொண்ட குலோத்துங்கன் காவனூர் மானியமாக ஒதுக்கப்பட்டிருந்த தென்றும், இரண்டாங் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டொன்று (1213) குறிக்கின்றது.