உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

தமிழ் இலக்கிய வரலாறு சென்று, அங்கிருந்த சுவடிகளைப்பற்றிக் கேட்டபோது. “அவர் வண்டிக் கணக்கான ஊர்க்காட்டுக் கணக்காயர் பொத்தகங்கள் எங்கள் வீட்டில் இடத்தை யடைத்துக் யடைத்துக் கொண்டிருந்தன. அவற்றை யெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் எடுத்தெறிந்து விட்டேம்” என்று சொன்னாராம்.

இம்

முந்நிகழ்ச்சிகளினின்று

யெல்லாம் அறிந்து கொள்க.

அறியவேண்டியவற்றை

7. ஆங்கிலச் சார்புக்காலம் (19ஆம் நூற்றாண்டு)

சரவணப் பெருமாள் கவிராயர்

இவர் சிவஞான முனிவர் மாணவரின் மாணவர்;

முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவர்; பணம் விடுதூது, அசுவ மேதயாக புராணம் முதலியன பாடியவர். இராமானுச கவிராயர்

இவர்

மாலியர்(வைணவர்); பார்த்தசாரதி மாலை, திருவேங்கட அநுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன பாடியுள்ளார். இவர் எழுதிய நன்னூல் விரிவுரை 1845-ல் இவராலேயே வெளியிடப்பட்டது. முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார்

வர் திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை முதலியன பாடியுள்ளார்.

சேனாதிராயர்

இவர் ஆறுமுக நாவலரின் ஆசிரியருள் ஒருவர்; எந்தப் புதுப்பாட்டையும் இருகாலிற்பற்றியெனப் பெயர்பெற்றவர். இவர் ஓர் அகர முதலியும் தொகுத்தார் என்பர்.

இராமச்சந்திர கவிராயர்

இவர் சகுந்தலை விலாசம், தாருகாவிலாசம் முதலிய நாடகங்களை இயற்றியவர்; எல்லிசு துரையாற் புகழ்ந்து பாடப்பெற்றவர். நூற்றுப்பங்கி (சதபங்கி), தொண்பங்கி (நவபங்கி) முதலிய சித்திரப் பாக்களைப் பாடவல்லவர். ஒருவர்க்கு ஒருங்கே அடுக்கி வரக்கூடிய துன்பங்களைப் பற்றி இவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

L