உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

239

கணக்கு நூல், வானூல் (Astronomy), கணியநூல் (Astronomical Astrology), ஏரணம் (Logic), மறைநூல் (Scripture), மந்திரம், மதநூல், மெய்ப்பொருள்நூல் (Philosophy), ஓக (யோக) நூல், நரம்பு நூல், மறநூல். பரிநூல், யானைநூல், கோழிநூல், புள்நூல் (சகுன சாத்திரம்), நாடி நூல், கைவரை நூல், சால நூல் (கண்கட்டுக்கலை), வசியநூல், மாயநூல். பேய் நூல், கரவட (களவு) நூல், கனாநூல் முதலிய முதலிரு கழகப் பல்வேறு துறைப்பட்ட பல்லாயிரம் நூல்களும் கடல்கோளாற் கரந்தன போக, எஞ்சியிருந்தவை யெல்லாம் ஆரியப் பூசாரியரால் அழியுண்டதாகத் தெரிகின்றது. இதை, அறிவும் ஆராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் விடுதலைப் பேறும் மிக்க இக்காலத்திலும் பிராமணர் கோயில் தமிழ் வழிபாட்டிற்குத் தடைசெய் சய்து என்றும் தமிழரைத் தம் அடிக்கீழ்ப்படுத்தத் துணிந்திருப்பதால் அறியலாம்.

திருக்குறளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களுள் தொல் காப்பியம் மட்டும் அழிவிற்குத் தப்பியதற்கு, அதிலுள்ள ஆரியச் சார்பான குறிப்புகளே காரணம் என்பதை அறிதல் வேண்டும்.

கடல்கோள், ஆரியப்பகை, என்பவற்றொடு, தமிழவேந்தர் தமிழைத் தாழ்த்தியமை, புலவரைப் புரப்பாரின்மை, மதப் போராட்டம், பொதுமக்கள் கல்லாமை என்பனவும், நூலழிவிற்குக் காரணமா யிருந்தனவேனும், அவையும் ஆரியப் பகையின் விளைவே என்பதை அறிதல் வேண்டும்.

பாலவ நத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர், பாடுபட்டு நாடுநகர் பட்டிதொட்டியெல்லாம் தேடித்தொகுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வைத்திருந்த ஆயிரக்கணக்கான அருந்தமிழ ஏட்டுச் சுவடிகள் யாவும், ஒருநாள் திடுமெனத் தீப்பற்றி அரை நாழிகைக்குட் சாம்பராய்ப் போயின. இதன் மாயத்தை ஆய்ந் துணர்க. அச்சேறாத திருக்குறளுரை பத்து அந் நூற்றொகுதியுள் இருந்ததாகச் சொல்லப் படுகின்றது.

16ஆம் நூற்றாண்டில் வரதுங்கராம பாண்டியன் பிறங்கடை யின்றி யிறந்ததால், மாபெரு நூலகம் உட்பட்ட அவன் சொத்துகள் யாவும் கரிவலம் வந்த நல்லூர்ப் பால்வண்ண நாதர் கோவிலுடைமை யாயின. 1889ஆம் ஆண்டில், தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர் பண்டாரகர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் சுவடிதேடிக் கருவை சென்று வினவியபோது, கோவில் முதுகேள்வி யார், “அந்தக் குப்பை கூளங்களை யெல்லாம் ஆகமப்படி நெய்யெரி யூட்டிவிட்டேம்” என்றாராம்.

அடுத்த ஆண்டு, ஐயரவர்கள் திருநெல்வேலித் தெற்குப் புதுத்தெரு வழக்கறிஞர் சுப்பையாப் பிள்ளை வீட்ட வீட்டிற்குச்