முன்னுரை
19
அறை (த.) - ராய் வெள்ளு
Gk. laia (a stone)
OS., OE., E wend (to go)
Bowels என்னும் ஆங்கிலச் சொற்கு ஆங்கில அகரமுதலிகளிற் காட்டப்பட்டுள்ள மூலம், அத்துணைப் பொருத்தமாய்த் தோன்ற வில்லை. அது பேகுலு என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபா யிருக்கலாம். சதுவு என்னும் தெலுங்குச் சொல் studium (Estudy) என்னும் இலத்தீனச் சொல்லொடு தொடர்புகொண்டதா என்பது ஆராயத்தக்கது.
இலத்தீனிலும் கிரேக்கத்திலுமுள்ள பல ககரமுதற் சொற்கள், ஆங்கிலத்திற் சகர முதலாகத் திரிந்து வழங்குகின்றன.
எ-டு இலத்தீன்
celebrare
civicus
c = k (L)
ஆங்கிலம்
கிரேக்கம்
ஆங்கிலம்
celebrate civic
kentron
centre
kinema
cinema
இம் முறையிலேயே, கெந்தும் என்னும் இலத்தீன் சொல்லும் சில மேலையாரிய மொழிகளிலும் கீழையாரிய மொழிகளிலும் சகர முதலாகத் திரிந்துள்ள தென்க. ஆரியமொழிக் குடும்பத்திலுள்ள பிற எண்ணுப் பெயர்களும், தென்மொழித் தொடர்புடையவை யென்பது பின்னர்க் காட்டப்பெறும். நூற்றைக் குறிக்கும் எண்ணுப் பெயரின் முதலெழுத்துப்பற்றி, ஆரிய மொழிகளைக் கெந்தும் மொழிகள் என்றும் சதம் மொழிகள் என்றும் இருபாலாகப் பகுத்துள்ளனர். ஆயின், தியூத்தானியச் சொற்கள் ஹகர முதலா யிருப்பதைக் கவனித்திலர்.
3. ஆரியமொழிக் குடும்பம்
உலக மொழிகள் மொத்தம் ஏறத்தாழ மூவாயிரம். அவை முப்பது குடும்பம்போற் பகுக்கப்பெறும். அவற்றுள் முதன்மை யானவை ஆரியம், சேமியம், சித்தியம் (அல்லது துரேனியம்) என மூன்றாகச் சொல்லப் பெறும். அவற்றுள்ளும் ஆரியம் முதன்மை யாகக் கொள்ளப்பெறும்.
தமிழும் அதன்வழிப்பட்ட திரவிடமும் சேர்ந்த தென் மொழிக் குடும்பத்தை, சிலர் ஆரியத்துள்ளும் சிலர் சித்தியத் துள்ளும் அடக்குவர். உண்மையில் அது அவை யிரண்டிற்கும் பொதுமூலமாகும்.
ஆரியக் குடும்பத்தைப் பின்வருமாறு பதினொரு பிரிவாகப்
பகுப்பர்.