உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வடமொழி வரலாறு


கின்றன. இதனால், தமிழ் வடமொழியினின்று கிளைத்ததென ஆகிவிடாது. தமிழிற் பல தன் சொற்கள் இன்றும் இறந்துபடா திருப்பதால், வேற்றுச் சொற்களை என்றும் விலக்க முடியும். இந் நிலைமை வடநாட்டு மொழிகட்கில்லை. தொன்னூலும் மொழிச் செம்மையும் போற்றாமையால், அவை அதை முன்னரே இழந்து விட்டன. பிராகிருதம் (முந்திச் செய்யப்பெற்றது), சமற்கிருதம் (நன்றாய்ச் செய்யப்பெற்றது) என்னும் சொற்பொருளே, அப் பெயர்கொண்ட மொழிகளின் முன்மை பின்மையை உணர்த்துதல்

காண்க.

(3) சிவ மதமும் திருமால் மதமும் ஆரியர் கண்டவை எனல்.

இதனால், தூய தமிழ் மதங்களாகிய இவ்விரு தென்மதங் கட்கும் பிராமண மதம் (Braminical religion) எனப் பெயரிட் டிருக்கின்றனர்.

(4) தமிழிலக்கணம் வடமொழியிலக்கணத்தைப் பின்பற்றிய தெனல்

தமிழுக்கே சிறப்பாக வுள்ள பொருளிலக்கணத்தின் அருமை பெருமைகளை மேலையர் அறிவாராயின், பவணந்தியின் நன்னூல் போல் கூறும் பாணினீயத்தை அவர் சிறிதும் போற்றார் என்பது திண்ணம். தமிழ் யாப்பிலக்கணமும் பிற மொழிகளிலும் மிக மேம்பட்ட வகைகளும் விரிவும் உடையதே.

தமிழகத்தில், அதிலும் பழைய செந்தமிழ்ப் பாண்டி நாட்டில், கால்டுவெலார் ஏறத்தாழ அரை நூற்றாண்டிருந்தும், தொல் காப்பியத்தையும் கடைக்கழகச் செய்யுள்களையும் பெறாமையாலேயே அவர் மேற்குறித்த முடிபிற்கு வரலானார்.

(5) இந்திய நாகரிகமே ஆரியரதெனல்.

இதற்குச் சில கரணியங்களும் உள. அவையாவன :

காணப்

1. இந்திய நாகரிகத்தைக் காட்டும் நூல்களெல்லாம் இன்று பெரும்பாலும் வடமொழிலேயே இருத்தல்.

2. பிராமணர் எல்லாத் துறையிலும் மேம்பட்டுள்ளமை. 3. தமிழைத் தாழ்த்தியும் சமற்கிருதத்தை உயர்த்தியும் பார் முழுதும் பரப்புரை செய்யப்பட்டு வருதல்.

4. இற்றை அறிவியல் நாகரிகத்தைக் கண்டவர் மேலை யாரிய மொழி பேசுபவராயிருத்தல்.